காதலிக்கும் போது இன்னொரு ஆணோடு..ஆடியோ வெளியிட்ட விஷ்ணுகாந்த்..விடிய விடிய பதில் கொடுத்த சம்யுக்தா
சென்னை: சின்னத்திரை நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இடையே பிரச்சனைக்கு காரணம் நிறைமாத நிலவே என்ற சீரிஸில் சம்யுக்தாவோடு நடித்த ரவி தான் என்ற ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார்.
தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது சம்யுக்தா முன்னாள் காதலனோடும் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்கான ஆதாரத்தை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி சம்யுக்தா போஸ்ட் போட்ட நிலையில் அதிகமான ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதை தன்னுடைய ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து பிரபலமான விஷ்ணுகாந்த மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். திருமணத்திற்கு பிறகு சில மாதங்களிலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களுடைய குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை instagram பக்கத்தின் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்த நிலையில் இவர்களுடைய குடும்ப பிரச்சனையையும் தற்போது சமூக வலைத்தளத்தில் மாறி மாறி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒருவரை மாற்றி ஒருவர் குற்ற சாட்டுகளை வைத்து கொண்டிருந்த நிலையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது கூட அதற்கு முன்பு காதலித்த ரவி என்பவருடன் பேசி இருக்கிறார் என்ற ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக விட வேண்டாம் என்று ஆனால் அதற்கு சம்யுக்தா சம்மதிக்கவில்லை என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டே இருந்தார். என்னை பற்றி பலரும் தப்பாக பேசுகிறார்கள் ஆனால் என் மீது தவறு இல்லை என்று சொல்லும் பொருட்டு இந்த ஆடியோவை வெளியிடுகிறேன்.
அந்த ஆடியோவில் சம்யுக்தா அவருடைய முன்னாள் காதலன் ரவியைப் பற்றி விஷ்ணுகாந்த் இடம் சொல்லாமல் தான் அவரை திருமணம் செய்து இருக்கிறார் என்றும் சம்யுக்தா ரவியை காதலித்துக் கொண்டிருக்கும் போது ரவி சம்யுக்தாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்றும் பல உண்மைகளை சம்யுக்தா அதில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் தான் பேசிய பழைய ஆடியோவை வெளியிட்ட நிலையில் சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி போஸ்ட் போட்டிருக்கிறார். அதற்கு சம்யுக்தாவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் அதிகமான நெட்டிசன்கள் உங்களுடைய ஆடியோவை கேட்டோம் ஆனால் நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா என்றெல்லாம் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் பல ரசிகர்கள் நாங்கள் சம்யுக்தாவிற்கு இப்போதும் சப்போர்ட் செய்கிறோம். அந்த ஆடியோவை பார்த்த பிறகு தான் உங்களைப் பற்றி நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த ஆடியோவில் உங்கள் மீது தவறு இல்லை என்றெல்லாம் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். அந்த கருத்துக்கு பதில் கொடுத்த சம்யுக்தா அதை ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார். அதுபோல தன்னை திட்டும் ரசிகர்களுக்கு உடனடியாக பதில் அடியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications