விவேக் இறப்பதற்கு முன்பு இதுதான் நடந்தது.. இந்த 2 ஆசை நிறைவேறலையே! சகோதரி கண்ணீர்
சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். இன்று அவருடைய மூன்றாவது ஆண்டு நினைவு நாளில் அவருடைய சகோதரி விவேக் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பேட்டி ஒன்றில் பேசிய விவேக்கின் சகோதரி விவேக் மறைவதற்கு முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பது பற்றி பேசி இருக்கிறார். அதோடு அதில் விவேக் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்கள் நடக்காமல் போய்விட்டது என்று கண்ணீரோடு பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சின்ன கலைவாணர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட விவேக் தன்னுடைய திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் மூடநம்பிக்கை, லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், வேலை வாய்ப்பின்மை என்று பல விஷயங்களை எடுத்துக் கூறி பலருடைய நன் மதிப்பையும் பெற்று இருந்தார். அதோடு தன்னுடைய வாழ்நாளில் மரக்கன்றுகளை நட்டு வைப்பதை முக்கியமான செயலாக செய்து வந்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென உடல்நலகுறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் காலமாகி இருந்தார். இந்த நிலையில் அவருடைய சகோதரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் விவேக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். விவேக்கின் சகோதரி மருத்துவராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் பேசுகையில், விவேக் இறப்பதற்கு முந்தைய நாள் எனக்கு போன் பண்ணி இருந்தார். உடலெல்லாம் ரொம்ப அசதியாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். நானும் அதற்கு சில மருந்துகளை ரெபர் பண்ணினேன். அதற்கு அவர் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். பிறகு அடுத்த நாள் 10 மணிக்கு எனக்கு போன் பண்ணினார்.
அப்போது நேற்று நீங்க சொன்ன மாத்திரை எதுவுமே போடல அக்கா. நல்ல படுத்து தூங்கினேன் ரெஸ்ட் எடுத்ததும் உடல் சரியாகிவிட்டது. இப்ப கொஞ்சம் பரவாயில்லை என்று சொன்னார். அதற்கு நான் சரி அப்போ இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடு என்று சொன்னேன். அதற்கு இல்ல எனக்கு முக்கியமான சில வேலைகள் இருக்கிறது இன்னைக்கு ரெஸ்ட் எடுக்க முடியாது அதனால் வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்று சொன்னார்.
நானும் சரி கவனமா இருந்துக்கோ என்று சொல்லிவிட்டு வேலைக்கு போய் விட்டேன். அன்னைக்கு ஹாஸ்பிடலில் ஒரு முக்கியமான ஆப்ரேஷன் இருந்தது. அதனால் நான் போனை எப்போதும் வைக்கும் ரூமில் வைத்துவிட்டு ஆப்ரேஷன் தியேட்டருக்கு போய் விட்டேன். என்னுடைய போன் இருந்த இடத்தில் டவர் கிடைக்காமல் இருந்திருக்கிறது.
ஆபரேஷன் முடித்துவிட்டு நான் வெளியே வந்த போது அங்கே இருந்த நர்ஸ் என்னிடம் ஓடி வந்து மேடம் விவேக் சாருக்கு ஏதோ உடம்பு முடியலன்னு சொல்லி ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க என்று சொன்னாங்க. நான் இப்போ 10 மணிக்கு தானே அவன் கிட்ட பேசினேன் என்று சொல்லி விவேக்கின் உதவியாளருக்கு போன் பண்ணுனேன். அவர் மேடம் நான் உங்களுக்கு எத்தனை முறை போன் பண்ணுனேன் உங்க நம்பர் கிடைக்கவே இல்லை என்று சொன்னார்.
பிறகு நான் மருத்துவமனைக்கு போகிறதுக்கு முன்னாடி தம்பியின் உயிர் பிரிந்து விட்டது. இப்ப வரைக்கும் என்னுடைய தம்பி இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தினமும் தூங்கி முழிக்கும்போது அவனை நினைத்து தான் முழிக்கிறேன். அவனை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நாங்கள் இருவரும் தான் அதிகமாக டச்சில் இருப்போம்.
எல்லோரும் சொல்கிறார்கள் நாட்கள் போகப்போக எல்லாம் மாறும் என்று சொல்கிறார்கள் ஆனால் எதுவுமே அப்படி மாறாது என்று என்னுடைய தம்பியின் நினைவுகள் எனக்கு சொல்கிறது. அதுபோல அவனுக்கு இரண்டு கனவுகள் நிறைவேறாமலே போய்விட்டது. ஒன்று அவன் திரைப்படம் இயக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஒரு கதை வைத்திருக்கிறேன். அந்த படம் மட்டும் வெளியானால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் பாடமாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொன்னு ஒரு பெரிய ஸ்கூல் கட்ட வேண்டும் அதில் படிக்கும் மாணவர்கள் வெளியே வரும்போது பல திறமைகளை வளர்த்து பிரபலமாக வேண்டும். அவர்களுடைய திறமை பல மடங்கு உயர வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தான். அந்த இரண்டும் நிறைவேறாமலே போய்விட்டது என்று அந்த பேட்டியில் கண்ணீரோடு விவேக்கின் சகோதரி பேசியிருக்கிறார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications