"தமிழ் நடிகைகளின் effort உங்க காதுக்கு கேட்கலையா?" மாரி செல்வராஜ்-க்கு மேடையில் நடிகை கேள்வி
சென்னை: தமிழ் திரையுலகில், அழுத்தமான கதைக்களத்தைக் கொடுத்துப் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது படங்களில் தொடர்ந்து மலையாளம் மற்றும் பிற மொழி நடிகைகளை நடிக்க வைப்பது குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், நடிகை ஆராத்யா எழுப்பிய கேள்வி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற 'மதராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்தச் சம்பவம் அரங்கேறியது.

மாரி செல்வராஜ் மீதான விமர்சனம்
மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தாலும், 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' போன்றப் படங்களில் அவர் தொடர்ந்து மலையாளம் அல்லது பிற மொழி நடிகைகளை நடிக்க வைப்பதாகத் தமிழ்த் திரையுலகில் ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.
மாரி செல்வராஜின் விளக்கம்
இந்த விமர்சனங்களுக்கு மாரி செல்வராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் விளக்கமளித்திருந்தார். அந்த விளக்கமே தற்போது ஆராத்யாவின் கேள்விக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மாரி செல்வராஜ் கூறியிருப்பதாவது: "டெடிகேட்டிவ் ஆன ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன். அது மலையாளி என்றால் கூடப் பிரச்சனையில்லை. மற்ற மொழி நடிகைகள், நாங்கள் என்ன மாதிரியானக் கேரக்டர் கொடுத்தாலும், என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எங்களுக்குக் கொடுக்கிறார்கள். அதுபோல, நாங்கள் மனதில் வைத்திருக்கும் கேரக்டருக்குச் சிலருடைய முகங்களும் நடிப்பும் எங்களுக்குச் சரியாகப் படுகிறது. அதனால் நாங்கள் மற்ற மொழி நடிகைகளைத் தேர்ந்தெடுக்கிறோம்."
தமிழ் நடிகைகளுக்கு அழைப்பு
"நாங்கள் எதிர்பார்ப்பது போலத் தமிழ் நடிகைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்" என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். இந்தக் கருத்தைப் பற்றித்தான் நடிகை ஆராத்யா, 'மதராஸ் மாஃபியா கம்பெனி' விழாவில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.
ஆராத்யாவின் கேள்வி
விழா மேடையில் நின்று இயக்குநர் மாரி செல்வராஜை நோக்கிக் கேள்வியெழுப்பிய ஆராத்யா, "தமிழிலும் அர்ப்பணிப்புடன் நடிக்கிற நடிகைகள் இருக்கிறோம், சார். நாங்களும் தமிழில் டெடிகேட்டிவ் ஆன ஆர்டிஸ்ட் ஆகத் தான் இருக்கிறோம். எங்களால முடிஞ்ச effort போடுறோம். உங்கள் காதுகளுக்கு அது வந்து சேரல" என்று மிகவும் உருக்கமாகத் தெரிவித்தார்.
வெளிப்பட்ட வலி
ஆராத்யாவின் இந்த வார்த்தைகள், தமிழ் நடிகைகள் பலர், தங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்காமல், திரையுலகில் சந்திக்கும் வலியையும், போராட்டத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.
மாரி செல்வராஜின் படங்களுக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் போலவே, திரைப் பிரபலங்களின் நடிப்புத் தேர்வு குறித்த இந்த உரையாடலும் தற்போது தமிழ்த் திரையுலகில் ஆழமான விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆராத்யாவின் இந்தக் கேள்விக்கு மாரி செல்வராஜ் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications