வடிவேலு சூட்டிங் முடிந்ததும் “இப்படி” பேசுவாரு! ஆனால்.. மோசமான வேலையை பார்ப்பாரு.. ஆர்த்தி எமோஷனல்
சென்னை: நடிகர் வடிவேலு காமெடி 90ஸ் ஹிட்ஸ்களில் தொடங்கி 2 கிட்ஸ்கள் வரைக்கும் இப்போது அவருடைய புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே நேரத்தில் வடிவேலு பற்றி சிலர் புகழ்ந்து பேசி வருவதையும் பார்க்க முடியும் அவரோடு நடித்த ஒரு சில நடிகர்கள் அவரைப் பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களை பேசுவதையும் கேட்க முடியும்.
நடிகை ஆர்த்தி கணேஷ் வடிவேலு பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். பேட்டி ஒன்றில் ஆர்த்தி வடிவேலுவோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக கொடி கட்டி பறந்த வடிவேலு வைகை புயல் என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். அதிலும் வடிவேலு குணச்சித்திர வேடங்களில் சமீபத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களை மீண்டும் அவரை பற்றி பேச வைத்திருந்தார்.
ஆனாலும் பழைய மாதிரி மக்கள் மத்தியில் வடிவேலுவின் காமெடி எடுபடவில்லை என்று ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர். ஆரம்பத்தில் வடிவேலுவை சுற்றி ஒரு குரூப் நடிகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அவர்களில் பலர் வடிவேலு உடன் கிடையாது. அதற்கு காரணமே வடிவேலு தான். அவர் கூட இருக்கிறவங்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்.
அவர்களுடைய நலனில் அக்கறை இல்லாதவர் என்று பல நடிகர்கள் வடிவேலுவை பற்றி குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் நகைச்சுவை நடிகை ஆர்த்தி வடிவேலு பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவரோட நடிக்கும் போது நம்ம நன்றாக நடிச்சுட்டா “அந்த சீன் முடிந்ததும் செல்லம் செமையா இருந்துச்சு... நல்லா பண்ணிட்ட” என்று மனதார பாராட்டுவார்.
ஆனால் அந்த சீன் படத்தில் இருக்கவே செய்யாது. காரணம் தன்னைவிட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்து விட்டால் அந்த படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவது தான் வடிவேலுவின் கேரக்டர். இதுபோல ஒரு படத்திற்காக நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ் மேக்கப் எல்லாம் போட்டு தயாராக இருந்தாராம். ஆனால் சிறிது நேரத்தில் அங்கு டைரக்டர் வந்து உங்க கேரக்டருக்கு வடிவேலு வேறொரு நடிகரை கூப்பிட்டு வந்துட்டாரு.
அவரை தான் நடிக்க வைக்க போறோம் என்று சொல்லிவிட்டார்களாம். அதுபோல 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும், ஆர்த்தியையும் தான் முதலில் முடிவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் வடிவேலு அவர்களெல்லாம் பார்த்த மூஞ்சிகள் என்று சொன்னதாலேயே ஆர்த்தியும் கோவை சரளாவையும் விலக்கி விட்டார்களாம் என்று ஆரத்தி பேசியிருக்கிறார்.
அதோடு எங்க மூஞ்சி பார்த்த மூஞ்சினு சொன்னாரு. இப்ப வடிவேலு பார்க்கவே பல வருஷம் ஆகிவிட்டது இதெல்லாம் கர்மா தான். பாம்புனா கொத்த தான் செய்யும் அதை மாற்ற முடியாது. அதனால நம்ம பாட்டுக்கு போயிட்டே இருக்கணும் என்று அந்த பேட்டியில் எமோஷனலாக ஆர்த்தி பேசியிருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications