அஜித்துக்கு ஜோடியாக டாப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. மிஸ் செய்த திருமதி செல்வம் சீரியல் நடிகை!
சென்னை: நடிகை அபிதாவிற்கு சின்ன திரையில் திருமதி செல்வம் சீரியல் எவ்வளவு பிரபலத்தை கொடுத்ததோ அதுபோல வெள்ளி திரையில் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து இருந்தது. அதே நேரத்தில் தனக்கு சினிமா துறையை பற்றி அந்த நேரத்தில் அதிகமாக தெரியாததால் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் என்று அபிதா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்
அந்த வகையில் சினிமா துறையில் பல நடிகர் நடிகைகள் சில திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகு இந்த திரைப்படத்தில் எனக்கு தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் தவற விட்டு விட்டேனே என்று பல வருடங்களாக புலம்பி கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருப்போம். சமீபத்தில் கூட கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்போது அந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க எனக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் அந்த நேரத்தில் மிஸ் பண்ணி விட்டேன் என்று நடிகை கிரண் ஃபீல் பண்ணி பேசி இருந்தார்.

இது கிரண் மட்டுமல்ல பல நடிகைகள் சொல்லும் வார்த்தை தான். ஒரு சில திரைப்படங்களில் அவர்கள் பிசியாக இருக்கும் போது வாய்ப்பு வந்தாலும் அடுத்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது. பிறகு அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு அந்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதும் அதை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். அதுபோல வெள்ளித்திரை மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அபிதா நடிகர் அஜித் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாமல் போய்விட்டது பற்றி பீல் பண்ணி பேசி இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலமாக பலருக்கும் பரீட்சையமான அபிதா அதற்கு முன்பு கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அபிதா நடித்து பிரபலமான சேது திரைப்படம் பலரும் அறிந்ததாக இருந்தாலும் அந்த திரைப்படத்தில் வரும் அமைதியான கேரக்டர்தான் அபிதா.
அவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அமைதியாக தான் இருப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிடமாட்டாராம். ரொம்பவே கூச்ச சுபாவம் உடைய அபிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணத்திற்கு பிறகு சில காலம் அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் அபிதா சின்னத்திரையில் அறிமுகமானார். அபிதாவின் முதல் சீரியல் குடும்ப பெண்களை வெகுவாக கவர்ந்து விட்டது. திருமதி செல்வம் சீரியலில் அர்ச்சனாவாக இப்ப வரைக்கும் இவரை பலரும் அழைத்து வருகின்றனர். தற்போது மீண்டும் ஜீ தமிழில் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக அபிதா நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆரம்பத்தில் அபிதா சில சீரியல்களிலும், திரை திரைப்படங்களில் தோழி கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எதார்த்தமாக பாலாவிற்கு அபிதாவின் போட்டோ கிடைத்திருக்கிறது. அந்த போட்டோவை பார்த்ததும் அபிதாவை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பாலா முடிவு செய்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் அபிதாவின் நடிப்பை பார்த்து இளையராஜாவே பாராட்டியதாகவும் அபிதா பேட்டியில் பேசி இருந்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் சேது படம் எனக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து எனக்கு அடுத்தடுத்த படங்களில் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியாது. அந்த நேரத்தில் என்னை வழிநடத்தவோ அல்லது சினிமாவில் எப்படி சான்ஸ் கேட்க வேண்டும் என்றோ எனக்கு சொல்ல யாரும் இல்லை. அப்போது ஒரு பிஆர்ஓ கூட நான் வைத்துக் கொள்ளவில்லை.
அதனால் தான் நான் நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அஜித்துக்கு பிளாஷ் பேக்கில் வரும் மீனா கேரக்டரில் நடிக்க என்னை கூப்பிட்டும் நான் போகாமல் இருந்து விட்டேன் என்று வருத்தத்துடன் ஒரு பேட்டியில் அபிதா பேசியிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications