நான் அப்போ அப்படி பேசி இருக்க கூடாது! அம்மா கிட்ட பிடிக்காதது இதுதான்.. ஐஸ்வர்யா பாஸ்கரன் எமோஷனல்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மா நடிகை லட்சுமி குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு சில வருடங்களுக்கு முன்பு தான் கொடுக்க பேட்டியில் தான் பேசிய விதத்தால் தன்னுடைய குடும்பத்தினர் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டனர் என்பது பற்றியும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல எந்த இடத்திலும் தன்னுடைய குடும்பத்தை யாரும் தவறாக வெளியே பேசக்கூடாது என்றும் அதற்கு சில அறிவுரைகளையும் ஐஸ்வர்யா பாஸ்கரன் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா பாஸ்கரன் அதைத்தொடர்ந்து வில்லியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யா நடிகை லட்சுமியின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஐஸ்வர்யா பாஸ்கரின் பாட்டி மற்றும் தாத்தா இருவருமே சினிமாவை சார்ந்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
அதுவும் ஐஸ்வர்யாவின் பாட்டி அதாவது நடிகை லட்சுமியின் அம்மா கர்ணன், வ உ சி, பார் மகளே பார், பூம்புகார் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல நடிகர் அஜித் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி ஐஸ்வர்யா பாஸ்கரன் சினிமா வாரிசாக இருந்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்பதற்காக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாராம்.
இப்படியான நிலையில்தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மா குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை ஐஸ்வர்யா பாஸ்கரன் தெரிவித்து இருக்கிறார். அதாவது நான் எந்த இடத்திலும் எங்க அம்மாவை பற்றியோ, தன்னுடைய குடும்பத்தை பற்றியோ குறை சொல்ல முடியாது. ஏன்னா என்னுடைய அம்மா வெளியே மேக்கப் போட்டு நடித்தால் பெரிய பிரபலம்... ஆனால் வீட்டுக்குள் வந்துவிட்டால் சாதாரண ஒரு பெண் போல தான் இருப்பார்.
அம்மா இதுவரைக்கும் பப் போன்ற பார்ட்டிக்கு போனதே கிடையாது. அம்மாவின் பார்ட்டி என்றால் வீட்டில் வைக்கும் கொலு தான். மேக்கப் போட்டு அம்மா நான்கு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் வீட்டில் என்னை அவ்வளவு அழகாக பார்த்துக் கொண்டார். எனக்கு ஸ்கூல் போகும்போது அம்மா தான் எல்லா வேலைகளையும் செய்தார். என்னை அதிகமாக வளர்த்தது பாட்டி என்றாலும் என்னை பார்த்துக்கொண்டது எங்க அம்மாவும் ஒருவர்.
நான் அம்மாவை பற்றி புரிந்து கொண்டது என்னுடைய குழந்தை பிறக்கும்போது தான். அம்மாவின் கஷ்டமெல்லாம் எனக்கு தெரிந்தது. அதுபோல சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நான் என்னுடைய அம்மாவை குறித்து தவறாக பேசி விட்டேன். அது அம்மாவின் மனதை எவ்வளவு கஷ்டப்படுத்தியது என்று எனக்கு அதற்குப் பிறகுதான் தெரிந்தது. அந்த ஒரு தவறை நான் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நான் செய்த தவறால் எங்க குடும்பத்தினர் எல்லோருமே ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க. அதற்குப் பிறகு நான் எந்த இடத்திலும் என்னுடைய குடும்பத்தை தவறாக பேச மாட்டேன். அப்படி பேசுவதற்கு எதுவும் இல்லை ஆனால் அப்படி பேசவும் கூடாது. நான் மட்டுமல்ல யாருமே நம்முடைய குடும்பத்தை பொதுவெளியில் தவறாக பேசுவது பெரிய தவறு. அது நாம் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் தான்.

அதுபோல எங்க அம்மாவிடம் பிடிக்காதது என்னவென்றால், எங்க வீட்டில் எங்க அம்மா தான் யோகாவில் லெஜெண்ட். அவருக்கு யோகாவில் அனைத்து விஷயங்களும் தெரியும் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் என்னை அவர் யோகா செய்ய சொல்லி அடிக்கடி திட்டுவார்.
நான் டான்ஸ் ஆடுகிறேன், இல்லன்னா உடற்பயிற்சி செய்கிறேன், அதுவும் இல்லன்னா விளையாடுகிறேன் என்று சொன்னால் அவர் கேட்க மாட்டார். அவருக்கு யோகா தான் பண்ணனும் என்று சொல்வார். அது ஒன்னு தான் எனக்கு கஷ்டமா இருக்கும் என்று அந்த பேட்டியில் ஐஸ்வர்யா பாஸ்கரன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications