எனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது.. அதிர்ச்சி கொடுத்த ஆலியா.. கணவர் மீது பல குற்றசாட்டு
நடிகை ஆலியா மானசா தன்னுடைய கணவரிடம் தனக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்துவிட்டது என்று கூறி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடிகை ஆலியா மானசா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு தன்னை பார்க்க வந்த கணவரிடம் ஆலியா மானசா பேசிய வார்த்தைகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
தனக்கு சீரியலில் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது என்று கணவர் சஞ்சீவ்வை ஆலியா மானசா அண்ணா என்று அழைத்து சஞ்சீவிற்கு கோபம் வர வைத்திருக்கிறார்.

இப்போ ரியல் ஜோடி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக அறிமுகமாகி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய ஆலியா மனசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் தற்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சஞ்சீவ் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நடிகை ஆலியா மானசா இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தற்போது சன் டிவியில் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராஜா ராணி செம்பா
நடிகை ஆலியா மானசா ராஜா ராணி சீரியல் செம்பா கேரக்டரில் இளைஞர்களின் மனசின் கனவு கன்னியாக மாறிவிட்டார். இந்த மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்கள் தவம் கிடந்தனர். அந்த அளவிற்கு ஆலியா மானசா தன்னுடைய செல்லமான சிரிப்பினால் இளைஞர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் கதாநாயகனை திருமணம் செய்து விட்டார் என்ற செய்தி கேட்டு அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்தனர்.. திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி இருந்தார். ஆனால் தற்போது மீண்டும் தன்னுடைய விடாமுயற்சியினால் பழைய செம்பாவாக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் திருமணம்
இந்த நிலையில் சன் டிவியில் மீண்டும் இனியா சீரியலில் ஆலியா கதாநாயகியாக நடிக்க, இவருக்காகவே இவருடைய ரசிகர்கள் அதிகமானோர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். தற்போது வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இனியாவிற்கு கதாநாயகனோடு திருமணம் முடிந்தது. அது மட்டுமல்லாமல் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மானசாவின் கணவரே இனியாவின் திருமணத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்து பிரமோவும் வெளியிட்டு இருந்தார். அது நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஆலியா மானசா தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

என்னம்மா இப்படி பண்ணலாமா
அதில் இனியா சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிருக்கு சஞ்சீவ் வந்து ஆலியாவிற்க்கு ஹாய் சொல்ல, ஆலியா ஹாய் அண்ணா என்று சொல்கிறார். எனது "அண்ணனா...?" அப்படி சொல்லாதீங்க என்று பதறியப்படியே சஞ்சீவ் கேட்க, எனக்கு சீரியலில் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது அதனால் அப்படித்தானே சொல்ல முடியும் என்று ஆலியா சொன்னதும் அதைக்கேட்டு அவருடைய கணவர் சஞ்சீவ் அதிர்ச்சி அடைகிறார். அது மட்டும் அல்லாமல் மீண்டும் அவர் நான் சூட்டிங் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது, வீட்டிற்கு வந்தால் ஒன்று தூங்குறீங்க, இல்லன்னா சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டா வர்றீங்க, இல்லன்னா கிரிக்கெட் விளையாட போயிடுறீங்க. நான் எப்போ உங்களை பார்க்கிறது என்று சஞ்சீவ் மீது அடுக்கடுக்கான குற்ற சாற்றுகளை வைக்கிறார். தற்போது இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications