ஆலியா மானசா 3வது முறை கர்ப்பமா? சஞ்சீவ் வெளியிட்ட போஸ்ட்.. ஆனால் கேப்ஷனில் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகை ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் குறித்த கேள்விதான் இப்போது இணையத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதில் இருவரும், "நாங்கள் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை சொல்லப் போகிறோம்... உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு தேவை.." என்று கூறியிருக்கிறார்கள்.
ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ரீல் கணவன் மனைவியாக நடித்து ரியலாகவும் காதலித்து திருமணம் செய்து தம்பதிகளாக மாறிவிட்டனர்.

ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் ஆலியா நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்தனர். சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகைக்கு இருப்பது போன்று அதிகமான ரசிகர்கள் இருந்ததாலே இவருக்கு இணையத்தில் அதிகமான ஃபேன்ஸ் பாலோவர்ஸ் மற்றும் ஃபேன்ஸ் பேஜ்களும் இருக்கிறது.
ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்த ஆலியா மானசா இரண்டாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது முதல் குழந்தைக்கு அம்மாவாக மாறி இருந்தார். இதனால் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆனாலும் கர்ப்பமான முதல் நாளிலிருந்து 9 மாதம் வரைக்கும் சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

முதல் பெண் குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு சில மாதங்களில் கர்ப்ப காலத்தில் உடல் எடை கூடி இருந்ததையும் குறைத்து மீண்டும் கதாநாயகியாக சீரியலில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த முறை விஜய் டிவியில் நடிக்காமல் சன் டிவியில் இனியா சீரியல் கதாநாயகியாக மாறி இருந்தார்.
இந்த சீரியலும் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த பதிவில், "இன்றைக்கு ஒரு பெரிய நாள்... உங்களுடைய ஆசிர்வாதங்கள் எல்லாம் எங்களுக்கு வேணும்.. குட் நியூஸ் சீக்கிரமாக சொல்லப் போகிறோம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.
இதற்கு அதிகமான ரசிகர்கள் ஆலியா மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்விகள் குவிந்து வருகிறது. ஆனால் அது குறித்து எந்த தகவலையும் ஆலியா உறுதியாக கூறவில்லை. இதனால் ஒருவேளை ஆலியா புது ப்ராஜெக்ட் கமிட் ஆகி இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications