Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆலியா மானசா வாழ்க்கையில் இவ்ளோ சோகமா? பறிபோன வீடு.. கதறி அழுத சஞ்சீவ் அம்மா.. ஜெயித்த காதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் சேர்ந்து கட்டிய வீடு குறித்த செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களும் அதில் இருந்து அவர்கள் எப்படி ஜெயித்து வெளியே வந்தார்கள் என்பது குறித்து சஞ்சீவ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சையமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா தம்பதி பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியிருக்கின்றனர். அந்த வீட்டிற்குள்ளேயே சும்மிங் பூல், ஆடிட்டோரியம், பெரிய கிச்சன், ஹால் என்று பல வசதிகள் இருக்கின்றது. அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Television Sun TV Alya Manasa

இவ்வளவு வளர்ந்து இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் வாழ்க்கையில் பல சோகங்களும் நிறைந்து இருக்கிறது. அது குறித்து தகவலை விரிவாக பார்க்கலாம். சஞ்சீவ், ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் பலருக்கும் பரீட்சையமானார். ஆனால் அவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருடைய அப்பாவும் ஏர் ஹோஸ்ட் ஆக வேலை பார்த்து வந்த நேரத்தில் தான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பிறகு தாங்கள் வசித்து வந்த சொந்த வீட்டை எட்டு லட்சத்திற்கு விற்று அவருக்கு மருத்துவம் பார்த்து இருக்கிறார்கள். அப்போதே 4 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டதாம். மீதம் இருந்த 4 லட்சம் ரூபாயில் சென்னையில் வீடு வாங்க முடியாது என்பதால் வீட்டை லீசுக்கு எடுத்து அங்கு இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் சஞ்சீவ்க்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவருடைய டான்ஸை பார்த்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்திருந்த சஞ்சீவ்க்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறது. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதுவும் பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்காததால் அடுத்து என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தபோது சஞ்சீவின் அப்பாவும் இறந்து போயிருக்கிறார்.

பிறகு சஞ்சீவ் அம்மா நான் பியூட்டிஷியன் ஆக இருக்கிறேன். என்னால் மூன்று கல்யாணம் கூட ஒரே நாளில் அட்டென்ட் பண்ண முடியும். நானும் அண்ணனும் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறோம். நீ உன்னுடைய வாய்ப்பை தேடு என்று சொல்லி அனுப்ப சஞ்சீவ் பல ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அப்படித்தான் அவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகை ஆலியா மானசாவை சந்தித்து, பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஆலியா மானசா தன்னுடைய குடும்பத்தை எதிர்த்து சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இப்ப வரைக்கும் ஆலியா மனசா வீட்டில் பெரிய அளவில் அவருக்கு சப்போர்ட் இல்லை என்றாலும் தன்னுடைய கணவரின் குடும்பமே தனக்கு போதும் என்று ஆலியா இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் முடிந்ததும் கர்ப்பமும் ஆகிவிட்டார். ஆனாலும் குழந்தை விஷயத்தில் நீ என்ன முடிவு எடுக்கப் போகிறாயோ அது தான் எங்கள் முடிவு. நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம் என்று சஞ்சீவ் குடும்பத்தினர் சொல்ல, ஆலியா இல்லை நான் என்னுடைய குழந்தையை பெற்றுக்கொள்ள போகிறேன் என்று சொல்லி குழந்தையும் பெற்று இருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூறி போன ஆலியா மானசா இனி நான் எங்க நடிக்க என்று இருந்த நிலையில் சஞ்சீவ் தான் அவருக்கு மோட்டிவேஷன் கொடுத்து மீண்டும் ஆலியாவை பழைய நிலைமைக்கு மாற்றி இருக்கிறார். இப்போது இன்னொரு குழந்தை பெற்ற பிறகும் ஆலியா தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல ஆரம்பத்தில் சொந்த வீடு இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்ட சஞ்சீவ் இப்போது தன்னுடைய அம்மாவிற்காக சுமார் ஒன்றரை கோடி அளவில் பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்து இருக்கிறார். அதிலும் அந்த வீட்டிற்கு அம்மா மற்றும் அப்பாவின் பெயரை சஞ்சீவ் வைத்திருக்கிறார். அதை பார்த்த அவருடைய அம்மா கண்கலங்கி அழுத புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது.

அதுபோல ஆலியா கர்ப்பமாக இருக்கும் போது புது கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதற்கு காரணம் சஞ்சீவ் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு கார் வைத்திருந்தாராம். எவ்வளவோ கஷ்டங்கள் வந்த பிறகும் கூட அந்த காரை மட்டும் விற்காமல் வைத்திருக்கிறார். வாய்ப்பு தேடி அந்த காரில் தான் போவாராம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் அவரால் சரியாக பைனான்ஸ் கட்ட முடியாததால் சஞ்சீவின் பிறந்த நாளில் அந்த காரை பைனான்ஸ்காரர்கள் எடுத்துட்டு போய்ட்டாங்களாம். அதனாலேயே சஞ்சீவ் தன்னுடைய குழந்தை பிறக்கும் முன்பு தான் கார் வாங்கி விட வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் அதை ஆலியா நிறைவேற்றி இருந்தார் என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தனர்.

வாழ்க்கையின் தொடக்கத்தில் பெரிய அளவில் எந்த வாய்ப்பும் இல்லாமல் போகும் இடமெல்லாம் ஏமாற்றங்கள் நிறைந்திருந்த போது அதிலிருந்து பல போராட்டங்களை தாண்டி மீண்டு வந்து இன்று தங்களுடைய கனவுகளை நிறைவேற்றி இருக்கும் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+