ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதியினருக்கு ஏற்பட்ட பிரச்சனை..ஐயோ என்ன ஒரே நேரத்தில் இப்படி ஆகிட்டு.!?
சென்னை: ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவருடைய சமூக வலைத்தள பக்கங்களும் செயல்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் சின்னத்திரை தம்பதிகளின் ஐடி ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

சமீப காலமாகவே பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஆலியா மானசா மற்றும் அவருடைய கணவர் சஞ்சீவ் கார்த்திக் இருவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களும் சில மணி நேரங்களாக ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் ஒன்றாக நடித்து ரியல் வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் தம்பதி தற்போது சன் டிவியில் டாப் சீரியல்களில் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் இவர்களுக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தாங்கள் அன்றாடம் செய்யும் வேலைகளையும் அதிகமானதை வீடியோக்களில் வெளிச்சம் போட்டு காட்டி வரும் இந்த சின்னத்திரை தம்பதிகளுக்கு youtube மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இருந்து இவர்கள் இருவருடைய இன்ஸ்டாகிராம் ஐடி ஒர்க் ஆகாமல் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆலியா மானசா மட்டுமல்லாமல் ஆலியா மானசாவின் ரசிகர்களும் அவருடைய பெயரில் அதிகமான பெயரில் சமூக வலைதள பக்கங்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது ட்ரெண்டிங் ஜோடிக்கு ஏற்பட்ட நிலைமையை பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் ஆலியா மானசா இது குறித்து இப்ப வரைக்கும் எந்த தகவலும் வெளியே தெரிவிக்காமல் இருக்கும் நிலையில் ரசிகர்களின் மத்தியில் அதிகமான கேள்விகள் எழுப்பப்படுகிறது,
ஐடியை யாரேனும் ஹேக் செய்து இருக்கிறார்களா? அல்லது ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய ஐடியை டெலிட் செய்திருக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சன் டிவியில் பிரபலமான நடிகர்களாக இருந்து வரும் இவர்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் அப்படி தங்களுடைய ஐடியை டெலிட் செய்ய மாட்டார்கள் என்பது பலருடைய வாதமாக இருக்கிறது.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications