ஆலியா மானசா கணவரை விவாகரத்து செய்யப் போகிறாரா? பழிவாங்காமல் விடமாட்டேன்! அவரே சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானசா அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இப்போது இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று செய்தி பரவி வரும் நிலையில் இது குறித்து ஆலியா கோபமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதோடு ஆலியா மனசா இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு இருக்கும் கெட்ட பழக்கங்கள் குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியதல்ல. அந்த வகையில் ஒரு சில ஜோடிகள் தான் நீண்ட நாட்களுக்காக தங்களுடைய திருமண வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி முதல் சீரியலிலே காதலித்த திருமணம் செய்து கொண்டனர்.
அந்த நேரத்தில் அதிகமான இளைஞர்கள் ஆலியா மானசாவிற்கு ரசிகர்களாக இருந்தனர் புகழின் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென்று இவர் தான் காதலிக்கும் விஷயத்தை சொன்னதும் இளைஞர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். இவருக்காக சமூக வலைத்தளத்தில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ்களும் ரசிகர்கள் தொடங்கி வைத்திருந்தனர். அவர்கள் இவர்களுடைய திருமண செய்தியை கேட்டு சோகமான போஸ்ட்களை போட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது.
இப்படியான நிலையில் ஆலியா மானசாவிற்கு திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. அந்த நேரத்தில் ஆலியா மானசா முதல் குழந்தைக்கு அம்மாவாக மாறி இருந்தார். ஒரு குழந்தை பிறந்த பிறகு கடுமையாக உடற்பயிற்சி எடுத்து மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தார். ஆனால் அப்போதும் இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக ஆகியிருந்தார் அதனால் அந்த சீரியலில் இருந்தும் கடைசி நேரத்தில் விலகி இருந்தார்.
அதை தொடர்ந்து இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு உடற்பயிற்சி மூலமாக திரும்பி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி அடிக்கடி தங்களுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் சஞ்சீவ் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அதிகமாக ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடியாக புகைப்படங்களை இணையத்தில் போஸ்ட் போடாமல் இருப்பதால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது. அது குறித்து முதல் முறையாக ஆலியா மானசா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது எங்களை பற்றி இந்த மாதிரி விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் நாங்கள் சிரித்துக் கொண்டுதான் இருப்போம். பெரியதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்க போறது கிடையாது. அதுபோல சில ஏமாற்றங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து நான் ஆரம்பத்தில் அதிகமாக கோபப்பட்டு இருக்கிறேன். அவர்களை பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நான் நினைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அந்த சிந்தனை எனக்கு வருவதில்லை என்று அந்த பேட்டியில் ஆலியா மானசா பேசியிருக்கிறார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications