ஆலியாவின் வீட்டிற்கு வந்த பெற்றோர்! பிரிந்த குடும்பம் சேர்ந்தது.. மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சி பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆலியா மானசாவின் பெற்றோர் அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக ஒரே அலுவலகம் அல்லது ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது புதிதல்ல அந்த மாதிரி தான் சினிமா மற்றும் சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகர்களும் காதலித்து திருமணம் செய்கிறார்கள் ஆனால் அதில் ஒரு சிலர் தான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணிக்கிறார்கள். அந்த வகையில் பலருக்கும் ஃபேவரைட் ஜோடிகளில் ஒருவர்தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி.

இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்து அதே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த நேரத்தில் சஞ்சீவ் குடும்பத்தினர் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொண்டனர். இப்ப வரைக்கும் சஞ்சீவின் அம்மா தான் ஆலியா மானசாவின் குழந்தைகளை கவனித்து வருகிறார். ஆலியா மானசா குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலேயே சீரியலில் நடிக்க தொடங்கி விட்டார்.
அது போல கர்ப்பமாக இருக்கும்போதும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆலியாவின் பெற்றோர் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என பல பேட்டிகளில் ஆலியா உருக்கமாக பேசியிருக்கிறார். ஆனாலும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து பல்வேறு கஷ்டங்கள் வந்தாலும் முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் இந்த தம்பதிகளுக்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆலியா மற்றும் சஞ்சீவ் தம்பதிகளை ஆலியாவின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இன்று ஆலியா மானசா தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதில் தன்னுடைய கணவர் சஞ்சீவ் பிறந்தநாளுக்கு தான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மறந்து விட்டேன் என்று மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
அதோடு சஞ்சீவ் மற்றும் ஆலியா தம்பதியினருக்கு சஞ்சீவின் அம்மா அப்பா ஒரு தாம்பூலத்தில் பூ பழம் மற்றும் சில பொருட்களையும் வைத்து கொடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆலியா மானசா தன்னுடைய கணவர் குறித்து பெருமையாக பேசி இருக்கிறார். அதில், என்னுடைய கணவரான சஞ்சீவ் அவருடைய வாழ்க்கையில் பாதி நாட்களில் என்னுடைய குடும்பத்திற்காகத்தான் கழித்திருக்கிறார்.

முதல் முதலாக அவருடைய பிறந்த நாளை என்னுடைய குடும்பத்துடன் கொண்டாடினோம். அவருடைய பிறந்த நாளில் கூட என்னை மகிழ்விக்க நினைத்திருக்கிறார். அவருடைய வாழ்நாளில் பாதி நாட்களை என் குடும்பத்தை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டும்தான் செலவழித்து இருக்கிறார். ஆனால் என்னுடைய வேலையின் பளுவால் நான் அவருடைய பிறந்த நாளை மறந்து விட்டேன். இனி என்னுடைய வாழ்க்கையில் இதுபோல மறக்க மாட்டேன் என்றும் மறந்ததற்கு தன்னுடைய கணவரிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
இதுவரைக்கும் ஆலியா மானசா அவருடைய குடும்ப புகைப்படத்தை வெளியே காட்டாத நிலையில் முதல்முறையாக தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.













Click it and Unblock the Notifications