திடீர் விபத்தால் ஆபரேஷன் தியேட்டரில் ஆலியா... நெருடலான பதிவு.. இவருக்காக இந்த நிலைமை?
சென்னை: சன் டிவி இனியா சீரியல் கதாநாயகி ஆலியா மானசா சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் கால்களில் கட்டு போடப்பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக கால்களில் அடிபட்டு பெரிய கட்டுப்போட்ட பட்ட நிலையிலும் இவர் மீண்டும் சீரியலில் நடிப்பதற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் கால் வலியின் காரணமாக அவருக்கு தற்போது ஆபரேஷன் செய்ய இருப்பதாகவும் ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லும் முன்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஹாஸ்பிடலில் இருந்து வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் அறிமுகமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தான் குழந்தை பிறந்த பிறகு கதாநாயகியாக நடிக்க அறிமுகமானார். இந்த நிலையில் ஆலியா மானசாவின் கால்களில் அடிபட்டு பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய கால்களில் எப்படி அடிபட்டது என்பதை தெரிவிக்காத ஆலியா மானசா, ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே கால்களில் கட்டு போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.

உருக்கமான வேண்டுகோள்
நான் எதிர்பார்க்காத ஒன்று என்னுடைய வாழ்க்கையில் நடந்து விட்டது. கால்களில் பிராக்சர் ஆகி இருக்கிறது. என்னுடைய பிரண்ட்ஸ் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எளிமையாக குணமடைய வேண்டும் என்று என சோகத்தோடு ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்று வரைக்கும் டான்ஸ் மாஸ்டர் ரோடு செம ஆட்டம் போட்ட ஆலியா மானசா என்று கால்களில் கட்டு போட்டுக்கொண்டு இருக்கும் நிலையை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கணவரின் பாராட்டு
இந்த நிலையில் மீண்டும் தான் இனியா சீரியலுக்கு நடிப்பதற்கு கிளம்பி விட்டேன் என்று அடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஆலியா மானசா சீரியலில் நடிப்பதற்காக கிளம்புவதை அவருடைய கணவர் வீடியோவாக வெளியிட்டு ஆலியாவை பாராட்டி இருக்கிறார். உங்களுடைய கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

உருக்கமான பதிவு
இந்த நிலையில் தற்போது "நான் அறுவை சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். சஞ்சீவ் கார்த்திக் மனைவி, ஏனென்றால் அவர் என்னை கவனித்துக் கொள்ள தவறியதே இல்லை. என் கெட்ட நேரத்திலும் ஆதரவாக இருப்பார். அவர் என்னை ஒரு பாரமாக பார்ப்பதில்லை. நான் மற்றும் அப்படித்தான் என் வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்கிறது. அவர் அக்கறை கொள்கிறார் நான் ஒவ்வொரு நொடியும் அவர் காயப்பட்டாலும் அவர் வலியை நான் உணர்வதை அவர் விரும்பவில்லை. ஆனால் என் வலியை உணர அவர் விடமாட்டார். சஞ்சீவ் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசு" என்று உருக்கமான பதிவு வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆலியாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications