அமலாபால் குழந்தையின் பெயர் அர்த்தம் இதுவா? வித்தியாசமான யோசனை.. நயன்தாராவிற்கு போட்டியா?
சென்னை: நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதை அமலாபால் நேற்று ஜூன் 17ஆம் தேதி ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அப்போது தன்னுடைய குழந்தையின் பெயர் பற்றி முதல் முறையாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் அதற்கான பெயர் அர்த்தம் இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதற்கு பிறகு கர்ப்பமான ஒவ்வொரு மாதத்திலும் அவர் புதியது புதியதாக போட்டோ ஷூட் மற்றும் தன்னுடைய கணவரோடு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

அதுபோல அமலாபாலின் வளைகாப்பு புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. அப்போது அமலாபாலின் வயிறு பெரியதாக இருப்பதால் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறதா? அதனால் தான் வயிறு இவ்வளவு பெரிதாக இருக்கிறதா? என்று வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அமலா பாலுக்கு கடந்த 11ஆம் தேதியே ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று அது குறித்து அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து அமலாபால் வீட்டிற்கு வரும்போது குழந்தை மற்றும் அமலா பாலுக்கு அவருடைய கணவர் பிரம்மாண்டமாக வரவேற்பு அளித்திருக்கிறார். வீட்டில் பலூனால் அலங்கரித்து அமலா பாலுக்கு அவருடைய கணவர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை அமலாபால் பகிர்ந்திருந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு இலாய்(ILAI) என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இது யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியின் பெயர், இந்த பெயருக்கு தமிழில் பரலோகம், சொர்க்கம், விண்ணுலகம் என்று கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் மகன்களின் பெயர்கள் உயிர், உலக் என்று வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கும் உலகம் என்ற அர்த்தத்தில் பெயர் வரும் நிலையில் அதே போல நடிகை அமலாபாலும் தன்னுடைய குழந்தைக்கு உலகம் என்கிற வகையில் அர்த்தம் வருகிற மாதிரி பெயர் வைத்திருக்கிறாரோ என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
இது இருபாலருக்கும் வைக்கப்படும் பெயராக இருப்பதால் குழந்தை பிறப்பதற்கு முன்பே அமலாபால் இந்த பெயரை தேர்வு செய்து வைத்திருப்பாராக இருக்கும், அதனால் தான் குழந்தை பிறந்ததும் குழந்தையின் பெயரை உடனே அறிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.அதே நேரத்தில் (ILAI) இதை இலை என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இயற்கை ஆர்வலரான அமலாபால் இலை என்று பெயர் வைத்ததாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications