பல நாள் காத்திருப்பு கைகூடியது! சந்தோஷ செய்தி பகிர்ந்த அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து
சென்னை: செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இப்போது நடிகையாக பிரபலமாகி கொண்டிருக்கும் அனிதா சம்பத் தான் இரண்டாவது கட்டிய வீட்டில் இன்று குடி பெயர்ந்து இருக்கிறார். அந்த மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக பணியாற்றிய அனிதா சம்பத் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்திலேயே அனிதா சம்பத்திற்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி விட்டனர். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு அனிதா சம்பத் அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியோடு சண்டை போட்டது பெரிய அளவில் அவர் மீது கவனத்தை திருப்பி இருந்தார்.

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது தன்னுடைய கணவர் பற்றியும் தன்னுடைய தந்தை குறித்தும் அடிக்கடி அனிதா பேசிக் கொண்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒரு சிலர் அவருடைய காதலை பாராட்டி வந்திருந்தாலும், பல இடங்களில் தன்னுடைய கஷ்டப்பட்ட காலங்களை மட்டுமே அனிதா சம்பத் சொல்லிக் கொண்டிருந்ததை சிலர் விமர்சித்தும் வந்தனர். இதனாலேயே அனிதா சம்பத் எவ்வளவு பாசிடிவ் ரசிகர்களை பெற்றிருந்தாரோ அதே அளவிற்கு நெகட்டிவ் ரசிகர்களையும் பெற்றிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததுமே அனிதா நிஜ வாழ்க்கையில் பெரிய அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது.

அவருடைய தந்தை பெங்களூருக்கு சாய்பாபா தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில் ட்ரெயினில் வரும்போது மாரடைப்பால் ட்ரெயினில் இறந்து விட்டார். இந்த செய்தி அனிதா சம்பத்தை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சோகத்தில் இருந்து நான் இப்ப வரைக்கும் வெளியே வரவில்லை என்று பல இடங்களில் அனிதா சம்பத் கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய வேலைகளிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் தான் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் இப்போது தன்னுடைய உழைப்பால் உயர்ந்து கொண்டிருக்கும் அனிதா சம்பத் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் புது வீடு கட்டி இருந்தார். தான் பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில் வளர்ந்து வந்த நிலையில் தன்னுடைய சம்பளத்தில் அப்பாவின் கனவை நிறைவேற்றி விட்டேன் என்று உருக்கமாக போஸ்ட் போட்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று தான் இரண்டாவதாக கட்டிய வீட்டில் குடிப்பெயர்ந்து இருக்கிறார். அவருடைய வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்களை வெளியிட்டு "இது என்னுடைய அம்மாவின் ஆசைக்காக நான் இரண்டாவதாக வாங்கிய வீடு. இந்த வளர்ச்சி உங்கள் அன்பு இல்லாமல் எனக்கு கிடைத்திருக்காது" என்று பகிர்ந்து இருக்கிறார். அனிதா சம்பத்தின் இந்த வளர்ச்சிக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications