உயிர் வாழ மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை! மீண்டு வந்த சீரியல் நடிகை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகிணி கேரக்டரில் பிரபலம் அடைந்த நடிகை அஸ்ரிதா சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பிறகு அந்த பிரச்சனையில் இருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உண்டு. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ஆரம்பத்தில் பெரிய அளவில் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது. இந்த சீரியலில் ராகிணி கேரக்டரில் நடிகை அஸ்ரிதா நடித்து வந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே சீரியலில் அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். இவருடைய அப்பா புரொடக்ஷன் மேனேஜராக இருந்திருக்கிறார். அதோடு அவருடைய அம்மாவும் சீரியல் நடிகையாகத்தான் இருந்திருக்கிறார். மூன்று வயதிலேயே அஸ்ரிதா சினிமா மற்றும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் நான் சின்னத்திரையில் "அம்மா அப்பா" என்ற சீரியல் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதை தொடர்ந்து கனா காணும் காலங்கள், தேன் மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர், தமிழும் சரஸ்வதியும், சொந்த பந்தம், கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல 2015 ஆம் ஆண்டு கடல் கடந்த காவியம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில், தனது 23 வயதில் நடந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய்விடும், இனி நடக்கவே முடியாது, உயிர் வாழவே முடியாது. ஒருவேளை இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு 10% தான் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் நான் என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய மன தைரியத்தின் காரணமாகவே ஒரு மாதத்திற்குள்ளேயே கேமரா முன்னாடி வந்து நின்றேன் என்று தன்னுடைய சோக கதையை கூறியிருக்கிறார்.
அதோடு சின்ன வயசிலேயே தன்னுடைய தந்தை இறந்து போன பிறகு தான் சினிமா மற்றும் சீரியலில் நடித்துதான் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டேன் என்று அந்த பேட்டியில் அஸ்ரிதா கூறி இருக்கிறார். அதோடு அஸ்ரிதா தெகிடி, திருமணம் எனும் நிக்கா, சில நிமிடங்களில், என்னை அறிந்தால், ஆறாவது சினம், கொரில்லா, வனமகன் போன்ற படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் போது ராகிணி கேரக்டரில் நடித்ததற்காக சிலர் என்னை திட்டுவார்கள். ஆரம்பத்தில் அது எனக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் பிறகு பழகிவிட்டது. நம்முடைய நடிப்பை உண்மை என்று நம்பி தானே ரசிகர்கள் திட்டுகிறார்கள் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் என்று அஸ்ரிதா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications