விஜய் டிவி நடிகை சன் டிவி சீரியலில் அறிமுகம்.. முதல் நாளே வெளியிட்ட போஸ்ட்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியலில் வேதாவாக நடித்த நடிகை அஸ்வதி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இன்று என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வதி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்பது புதியது அல்ல. ஒரு சீரியல்கள் தொடங்கப்படும் போது அதில் இருக்கும் நடிகர்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக அந்த சீரியலில் பயணிக்க முடியாமல் விலகி விடுகிறார்கள். ஆனால் சீரியலில் கதாநாயகன் அல்லது கதாநாயகி விலகி விட்டால் அது மக்கள் மத்தியில் அதிகமாக அதிருப்தியை ஏற்படுத்தி விடும்.

குறிப்பிட்ட கேரக்டரில் இனி இவர்கள்தான் என்று மக்கள் அந்த கேரக்டரோடு நடிகர்களை தொடர்புபடுத்தி மனதில் பதிய வைத்திருந்த பிறகு திடீரென்று அவர் விலகுவதால் அந்த சீரியலுக்கு டிஆர்பி சரிவு ஏற்படுகிறது. ஆனாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த மாதிரிதான் மலர் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கதாநாயகன் திடீரென்று விலகி இருந்தார்.
அதை தொடர்ந்து இப்போது அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி சர்மாவும் விலகி இருக்கிறார். ஏற்கனவே ப்ரீத்தி சர்மா "திருமணம்" என்ற சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தான் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த சீரியல் மூலமாக அவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார்.

நடிகை ராதிகா நடித்து இயக்கிய சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்த ப்ரீத்திக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அது போல இணையத்திலும் இவருக்கு அதிகமான இளம் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் இவருக்கு மலர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இந்த சீரியலும் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால் திடீரென்று பிரீத்தி சர்மா சீரியலில் இருந்து விலகி விட்டதாக கடந்த வாரத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் இன்று ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. இன்றைய ப்ரோமோவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியலில் வேதாவாக நடித்த நடிகை அஸ்வதி மலராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அதிலும் அஸ்வதி ஆரம்பமான இன்று அவர் கர்ப்பமாக இருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே அஸ்வதி மோதலும் காதலும் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பார். தன்னால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலை இருந்தாலும் தான் கல்யாணம் செய்த கணவரின் குழந்தையை தன்னுடைய குழந்தை போல வேதா கேரக்டரில் அஸ்வதி பார்த்துக் கொள்வார். அதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
ஆனாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மோதலும் காதலும் சீரியல் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அவர் புதிய சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அவர் மலர் சீரியல் அறிமுகமாக இருப்பதை பலரும் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில் அஸ்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தனை நாட்களும் வேதாவாக ஆதரவு தந்தது போலவே மலராகவும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications