சினிமா வாய்ப்புக்காக 14 வயதில் போட்ட ஊசி.. அதனால் ஏற்பட்ட விளைவு.. சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அம்மாவின் தோழியாக பார்வதி கேரக்டரில் நடிகை பாக்கியஸ்ரீ நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமாவின் ஆரம்ப காலம் குறித்து பேசி இருக்கிறார். அதோடு 14 வயதில் நடிகையாக வேண்டும் என்பதற்காக போட்ட ஊசியால் தான் பட்ட வேதனை குறித்தும் பேசி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகை பாக்கியஸ்ரீ பல திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நிலையில் அது பற்றி விரிவாக அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனின் அம்மா அதாவது விஜயாவின் தோழி பார்வதி ஆக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை யார் பெயர் பாக்கியஸ்ரீ.

இவர் தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதோடு பாக்கியஸ்ரீ 80 காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இடையில் அவருக்கு திருமணம் ஆனதும் நடிப்பிலிருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இப்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் கவலைகள் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். அதை மறந்துதான் சந்தோஷமாக இருக்கணும் என்று மோட்டிவேஷனாக பேசியிருந்தார். அப்போது சந்தோஷமாக இருந்தால்தான் இளமையாக இருக்கலாம்.

அது ஒரு நடிகைக்கு இது ரொம்பவே முக்கியம். 1982ல் நான் சினிமாவில் அறிமுகமான சின்ன வயதிலிருந்து நடிகை ஸ்ரீதேவியை பார்த்து தான் என்னால் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அப்போதெல்லாம் சென்னையில் தான் தமிழ், மலையாளம், தெலுங்கு எல்லா படத்திற்கான சூட்டிங் நடக்கும். அப்படி என் உறவினர் மூலம் மலையாள படத்தில் நான் அறிமுகமானேன்.
அதைத் தொடர்ந்து தேவியின் திருவிளையாடல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படம் தமிழிலும் வெளியாகியிருந்தது. மனோரமா, கே ஆர் விஜயா போன்றோரெல்லாம் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். தாவணி கூட எனக்கு அந்த நேரத்தில் ஒழுங்கா கட்ட தெரியாது. மனோரமா தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். 14 வயதில் சினிமாவில் வந்து என்னுடைய உடம்பை கொஞ்சம் குண்டாக்குவதற்காக ஊசி எல்லாம் போட்டேன்.
காரணம் அப்போதெல்லாம் நடிகைகள் கொஞ்சம் குண்டாகத்தான் இருப்பார்கள். அப்படி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். அதற்காகத்தான் நானும் என்னுடைய உடல் எடையை ஊசி போட்டு அதிகரித்தேன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டேன். ஆனால் ஆரம்பத்தில் நான் ஊசி போட்டதன் விளைவு கர்ப்ப காலத்தில் தெரிந்தது. ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் ஊசி போட்டு குண்டாகினேன்.
ஆனால் இந்த மாதிரி ஊசி போட்டது என்னுடைய அம்மாவுக்கு தெரியும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. ஏனென்றால் என்னுடைய அப்பா நான் நடிக்க கூடாது என்பதில் ரொம்பவே உறுதியாக இருந்தார் நாங்கள் பிராமண குடும்பத்தை சார்ந்தவர்கள். அதனால் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. என்னுடைய விருப்பத்தில் தான் நான் நடிக்க வந்தேன். அந்த நேரத்தில் காலையில் மலையாளம், மதியம் தமிழ், மாலை தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நான் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.
எல்லா சூட்டிங்கும் சென்னையில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் சமாளிக்க முடிந்தது. நான் புகழின் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து விட்டேன். ஆனால் அவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து தவறு என்று பிறகு நான் வருத்தப்பட்டேன். ஆனால் திரும்பி பார்த்தால் நாட்கள் செல்லாது மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து இப்போது நடிக்க வந்திருக்கிறேன். அதோட நான் ரஜினி சார் உடன் நடித்திருக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் பாக்யஸ்ரீ பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications