பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம்! பள்ளியில் தலைகாட்ட முடியாமல் தவித்த நடிகை பானுப்பிரியா.. படிப்பே போச்சி
சென்னை: கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பலருடைய மனதை கவர்ந்த நடிகை பானுப்பிரியா பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியதற்கான காரணம் தான் இப்போது இணையவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த பானுப்ரியாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாக்கியராஜ் செய்த செயலால் பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.
நடிப்பு, நடனம் என பன்முக திறமை கொண்ட நடிகை பானுப்பிரியா சமீபத்தில் நினைவாற்றல் குறைபாட்டால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதற்கு பிறகு அதிகமாக எந்த நிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருக்கும் நிலையில் பாக்கியராஜால் எப்படி பானுப்ரியாவின் படிப்பு நிறுத்தப்பட்டது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1967இல் ஆந்திராவில் பிறந்த நடிகை பானுப்ரியா பிறகு குடும்பத்தோடு சென்னையில் குடி பெயர்ந்து இருந்தார். அதற்கு பிறகு 1980களில் தொடங்கி 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான். அதனாலே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் பானுப்பிரியாவும் ஒருவர். அவருடைய அழகான கண்கள் மற்றும் நடன அசைவுகள் பலருடைய மனதையும் கவர்ந்தது.
கடைசியாக பானுப்பிரியா கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய கணவர் இறப்பிற்கு பிறகு தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
நடிகை பானுப்பிரியா நடித்த திரைப்படங்களில் அவருடைய எவர்கிரீன் டான்ஸ் மற்றும் அல்லாமல் பாடல்களும் கூட பலருடைய மனதைக் கவர்ந்தது. அதிலும் மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடல், செல்லமே திரைப்படத்தில் இவருடைய க்யூட்டான டான்ஸில் வந்த "கும்மியடி பெண்ணே கும்மியடி" என்ற பாடல் இப்போதும் பலருடைய ஃபேவரைட் தான்.
இப்படியாக இருக்கையில் நடிகை பானுப்பிரியா எப்படி படிப்பை விட்டார் என்பதை பற்றி பார்க்கலாம். அதாவது நடிகர் பாக்கியராஜ் தன்னுடைய படத்திற்காக பானுப்பிரியா பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அணுகி இருக்கிறார். அப்போது பானுப்பிரியா பள்ளி மாணவியாக இருந்தாலும் அவருடைய டான்ஸ் திறமையை பார்த்து பாக்கியராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதற்கான போட்டோ சூட்டுக்கு பிறகு பானுப்பிரியா அந்த படத்திற்கான கேரக்டரை விட ரொம்பவும் குழந்தை போல தெரிந்திருக்கிறார் அதனால் இந்த கேரக்டருக்கு சரியாக இருக்காது என்று பாக்கியராஜ் பானுப்பிரியாவை நீக்கிவிட்டாராம். ஆனால் அதற்குள் பானுப்பிரியா தான் பாக்கியராஜ் படத்தில் நடிக்கப் போவதாக பள்ளிக்கூடத்தில் முழுவதும் பெயர் சொல்லிவிட்டாராம்.
இதனால் பானுப்பிரியா திரைப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை தெரிந்ததும் அவருடைய நண்பர்கள் எல்லோரும் கேலி செய்திருக்கிறார்கள்.
அதனாலேயே பானுப்பிரியா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டாராம் அதற்குப் பிறகுதான் நீண்ட நாட்களாக பல முயற்சிகள் எடுத்து பானுப்ரியா வாழ்க்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications