எதிர்நீச்சல் முடிய காரணமே இதுதான்! சேனல் தரப்பில் சொன்னது இதுதான்.. ரகசியத்தை உடைத்த பட்டம்மாள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சீரியல் திடீரென்று முடிவுக்கு எதற்காக வந்தது என்பது பற்றி முதல் முறையாக இந்த சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் நடித்த நடிகை பாம்பே ஞானம் பல ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார். இது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்த சீரியல் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. வித்தியாசமான கதைகளும், நடிகர்களின் இயல்பான நடிப்பு காமெடி சென்டிமென்ட் என்று பல குணங்களில் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்திருந்தது.

அதே நேரத்தில் சீரியலே பார்க்காத ஆண்கள் கூட இந்த செய்திகளை விரும்பி பார்த்து வந்தனர். இளைஞர்கள் மத்தியிலும் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனாலும் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதற்கு பிறகு திடீரென்று கடந்த ஜூன் எட்டாம் தேதியோடு இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
பல பிரச்சனைகள் முடிவுக்கு வராமலேயே இந்த சீரியல் முடிந்துவிட்டது என்பது பலருடைய வருத்தமாகவும் இருந்தது. ஆனாலும் இந்த சீரியல் எதற்காக இவ்வளவு சீக்கிரமாக முடித்தார்கள் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் அனைவரையும் கவர்ந்த பாம்பே ஞானம் இந்த சீரியல் முடிவு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் பாம்பே ஞானம் பேசுகையில் இந்த சீரியல் தொடங்கியதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. அதில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவை மக்கள் அந்த கேரக்டராகவே பார்க்க தொடங்கி விட்டார்கள். அந்த கேரக்டருக்கும் மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. மாரிமுத்து இருந்த வரைக்கும் நான் தான் இந்த சீரியலில் ஹீரோ என்னை வைத்து தான் இந்த கதையே போய்க் கொண்டிருக்கிறது, நீங்கதான் எனக்கு எதிரி என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால் அவருடைய மறைவால் ரசிகர்கள் எவ்வளவு வருத்தமடைந்தார்களோ அதுபோல சீரியல் தரப்பிலும் பெரிய அதிர்ச்சி கிடைத்து விட்டது. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று யூகிக்க முடியாத வகையில்தான் இருந்தது. இயக்குனர் முதல் எல்லோருமே அதிர்ச்சியில் இருந்தார்கள். அதனாலேயே கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. அதற்கு பிறகு வந்த வேலராமமூர்த்தியை மக்கள் ஆரம்பத்தில் பெரியதாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்கு காரணம் அதுவரைக்கும் அவர்கள் பார்த்து வந்த குணசேகரன் வேற கேரக்டர், அதற்குப் பிறகு குணசேகரனின் கேரக்டர் மாரி இருந்ததை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள தொடங்கினார்கள். அந்த நேரத்தில் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது.
அதற்குக் காரணம் சில மாதங்களாக கதையில் ஏற்பட்ட மாற்றத்தால் கதை இழுக்க தொடங்கியதும் மக்கள் அதை விரும்பவில்லை. அதனாலேயே இந்த சீரியலுக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வர தொடங்கியது. அதற்கு பிறகு டிஆர்பியும் குறைந்தது... டிஆர்பி குறைந்ததும் உடனே சேனல் தரப்பில் இருந்து வேற நேரத்திற்கு மாற்ற சொன்னார்கள்.
அது இயக்குனருக்கு ஏற்றதாக இல்லை. வேற நேரத்திற்கு மாற்றினால் பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று நினைத்த இயக்குனர் உடனே கதையை முடித்து விடலாம் என்று சொல்லிவிட்டார். இதை கேட்டு இயக்குனர் சொன்ன நாளிலிருந்து எல்லா நடிகர்களும் அழுது கொண்டுதான் இருந்தார்கள் என்று அந்த பேட்டியில் பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications