கயல் சீரியல் “சைத்ரா” வீட்டில் விசேஷம்.. கேக்குடன் கொண்டாட்டம்.. குவியுது வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி தன்னுடைய 29 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா பகிர்ந்து இருந்த நிலையில் இது அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
கன்னட நடிகையான சைத்ரா ரெட்டி தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். முதலில் இந்த சீரியலில் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்து வந்த நிலையில் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி திரைப்படங்களில் நடிக்க சென்று விட்ட பிறகு அவருக்கு பதிலாக பிரியா கேரக்டரில் சைத்ரா நடித்து வந்தார். முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவிட்டு இரண்டாவதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.

ஸ்வேதா கேரக்டரில் சைத்ராவை பார்த்து பல பேர் திட்டி இருந்தனர். தனக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்று சொல்லியிருந்த சைத்ராவிற்கு ஒரு சீரியலிலேயே அதிகமான நெகட்டிவ்வர்ஸ்களும் கிடைத்துவிட்டனர். அதே நேரத்தில் வில்லியாக இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த வில்லி என்ற தனித்துவமான இடத்தை பிடித்து சைத்ராவிற்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.
அது போல கொரோனா காலகட்டத்தில் சைத்ரா அவருடைய தோழிகளான செம்பருத்தி சீரியல் ஷபானா, யாரடி நீ மோகினி நட்சத்திரா, பூவே பூச்சூடவா ரேஷ்மா என நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இவர்களுடைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அந்த நேரத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிற்குள் அடைந்திருந்த போது இவர்கள் போட்டோஷூட் எடுத்து கலக்கிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து அந்த நேரத்தில் தான் இவர்கள் அணியில் சைத்ரா, ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் சைத்ரா மற்றும் ராகேஷ் திருமணத்தில் மற்ற தோழிகளான ஷபானா, ரேஷ்மா முரளிதரன், நட்சத்திரா எல்லோரும் செம ஆட்டம் போட்டிருந்தனர்.
அதுபோல சைத்ராவை தொடர்ந்து அடுத்தடுத்து இவர்கள் மூன்று பேருமே திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சைத்ரா யாரடி நீ மோகினி சீரியலுக்கு பிறகு சன் டிவியில் கயல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் அஜித்துடன் வலிமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது கூட சன் டிவியில் டாப் குக்கு நிகழ்ச்சியில் குக்காக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று தன்னுடைய 29 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாள் வீடியோவை சைத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல நடிகைகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதிலும் நடிகை சினேகா, ஷபானா, நட்சத்திரா ரேஷ்மா மற்றும் ரேஷ்மாவின் கணவர் மதன் பாண்டியன் என்று பல்வேறு பிரபலங்கள் தொடர்ச்சியாக சைத்ராவிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications