சிம்பு என்கிட்ட நேரடியா லவ் யூ சொன்னாரு! அப்போ நடந்த விஷயம் இதுதான்! ஓபனாக பேசிய சாந்தினி பிரகாஷ்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் (சிம்பு) மீது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக நடிகைகளுக்கும் இருக்கும் ஈர்ப்பு பற்றிப் பலமுறை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில், சீரியல் நடிகை சாந்தினி பிரகாஷ் சிம்புவின் மீதுள்ள தன் தீவிரமான காதலை வெளிப்படுத்தியதும், சிம்புவின் தந்தை டி. ராஜேந்திரன் (டி.ஆர்) நெகிழ்ச்சியுடன் பேசியதும், சில மாதங்களுக்கு முன்பு பெரிய பேசுபொருளானது. இப்போது மீண்டும் சிம்பு உடனான தன் காதல் குறித்துப் பேசி சாந்தினி பிரகாஷ் வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த சாந்தினி பிரகாஷ்
சாந்தினி பிரகாஷ், சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் வில்லியாகத்தான் இவர் அதிகமாக நடித்து இருக்கிறார்.சன் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற 'வானத்தைப்போல' சீரியலில் நடித்ததன் மூலம் இவர் கவனம் பெற்றார்.
தற்போதைய நிலை
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சிங்கிள் பசங்க' என்ற ரியாலிட்டி ஷோவில், கூமாம்பட்டி தங்கப்பாண்டிக்கு ஜோடியாகக் கலந்து கொண்டு, நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சு மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
சிம்புவிடம் சொன்ன காதல்!
'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சிறப்பு விருந்தினராக டி. ராஜேந்திரன் கலந்துகொண்டார். அப்போது சாந்தினி பிரகாஷ், சிறிதும் தயங்காமல் வெட்கத்துடன், "நான் உங்கள் மகன் சிம்புவைத்தான் காதலிக்கிறேன்" என்று தன் காதலை வெளிப்படுத்தினார். அதற்குப் பதிலளித்த டி. ராஜேந்திரன், கண்கலங்கியபடி நெகிழ்ந்துபோய்ப் பேசியதுதான் அந்த நிகழ்ச்சியின் உச்சகட்ட எமோஷனல் மொமன்ட்
"என்னுடைய மகனிடம் ஒரு பொண்ணைப் பார்த்து 'இந்த பொண்ணைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்' என்று சொன்னால் அவன் மறுப்புத் தெரிவிக்க மாட்டான். ஆனால், என்னுடைய மகனைப் புரிந்து கொண்டு, அவன் மீது முழுமையான அன்பைச் செலுத்தக்கூடிய ஒரு பெண் வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெண் என்னுடைய மகன் வாழ்க்கையில் வரவேண்டும், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்."
சாந்தினி நெகிழ்ச்சி
டி.ஆர் அளித்த பதிலுக்குப் பிறகு சிம்புவைச் சந்தித்த அனுபவம் குறித்து, சாந்தினி பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். "நான் 'தக் லைஃப்' திரைப்படத்தின் விழாவில் இருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சியில் முதலில் எல்லோரும் சிம்புவுக்கு 'ஐ லவ் யூ' என்று சொன்னார்கள். அவர்கள் எல்லாரும் சொல்லி முடிந்த பிறகு, நான் தனியாக சிம்பு சார்... 'ஐ லவ் யூ' என்று சொன்னேன்."
சாந்தினி காதலைச் சொன்னதும், சிம்புவின் எதிர்வினைதான் இங்கே ஹைலைட்!, "அவர் (சிம்பு) மேடையில் இருந்து எனக்கு இரண்டு விரல்களில் ஹாட்டின் போல வைத்து 'ஐ லவ் யூ டூ' என்று சொன்னார். அது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது!" என்று பூரிப்புடன் கூறியுள்ளார் சாந்தினி.
மனதாலேயே சிம்புவுடன் வாழும் சாந்தினி
மேலும், தன் காதல் குறித்து அவர் பேசிய வார்த்தைகள், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "நான் அவருடைய மனைவியாகக் கனவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். ஒருவரைப் பிடித்திருக்கிறது, காதல் இருக்கிறது என்றால், அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பது இல்லையே! நமக்கு பிடித்தவங்க கூட நாம் மனசார வாழ்ந்தாலே போதும். அந்த வாழ்க்கைதான் நான் இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கிறேன்."
சிம்புவின் மீது சாந்தினி பிரகாஷ் வைத்திருக்கும் இந்த நிஜமான மற்றும் நிபந்தனையற்ற காதல், இணையத்தில் வைரலாகிப் பலருடைய வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications