மாரிமுத்துவின் ஆத்மா எதிர்நீச்சல் செட்டில்.. "ஈ” வடிவில் நடிகர் பின்னாடி சுற்றுது! நடிகை சொன்ன பகீர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர் இறந்த பிறகு அவருடைய ஆத்மா இன்னும் அதே செட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் பேசியிருக்கிறார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்து திடீரென காலமானார். அவர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்று கனவோடு சென்னைக்கு வந்த மாரிமுத்து உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றி பிறகுதான் நடிகராக வாய்ப்பு கிடைத்தது. அதுபோல இயக்குனராகவும் புலிவால் உட்பட சில திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் வில்லன்
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் அறிமுகமானார். அந்த சீரியல் அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு போனது. எதிர்நீச்சல் குணசேகரன் ஆக அனைவரையும் வியக்க வைத்தார். இவர் நல்லவரா? கெட்டவரா? என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இவருக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். "எம்மா ஏய்" என்று அவர் சொன்ன வசனம் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.
மாரிமுத்து பற்றிய சர்ச்சை
எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வந்தார். அதுபோலத்தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜாதகத்தை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள் கலந்து கொண்டு விவாதித்த போது ஜாதகம் பொய், அதுவெல்லாம் கட்டுக்கதை என்ற அணி சார்பாக பேசி இருந்தார். அப்போது அது பெரிய அளவில் விமர்சனமானது. அடுத்த சில மாதங்களிலேயே சூட்டிங் முடித்துவிட்டு டப்பிங் பேசுவதற்காக சென்ற இடத்தில் நெஞ்சுவலி ஏற்பட தானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போன மாரிமுத்து அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகர் மாரிமுத்து மரணம்
இந்த செய்தி அந்த நேரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைத்தது. சின்னத்திரை பிரபலங்கள், வெள்ளி தரை பிரபலங்கள் ,ரசிகர்கள் என அனைவருமே தொடர்ந்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்துள்ளனர். எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு தூணாக இருந்த மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு நடிகர் வேலராமமூர்த்தி அந்த கேரக்டரில் நடிக்க தொடங்கி இருந்தார். வேலராமமூர்த்தி உடன் ஏற்கனவே சில திரைப்படங்களிலும் மாரிமுத்து நடித்திருந்தார். ஆனாலும் எதிர்நீசசல் சீரியலில் முதல் பாகம் முடிவடைந்ததுமா இரண்டாவது பாகத்திலும் வேலராமமூர்த்தி குணசேகரனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல் அறிவுக்கரசி
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது எதிர்நீச்சல் சீரியல் செட்டில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது நடிகர் மாரிமுத்துவின் ஆத்மா இன்னும் எதிர்நீச்சல் செட்டில் தான் இருக்கிறது என்று பேசி இருக்கிறார். அதாவது நான் சீரியலில் இப்போதுதான் நடிக்க தொடங்கி இருக்கிறேன் ஆனால் நான் பார்த்த வரைக்கும் எதிர்நீச்சல் செட்டில் மாரிமுத்துவின் ஆத்மா இருக்கிறது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் நடிகை பேட்டி
அவர் ஈ வடிவத்தில் தான் எதிர்நீச்சல் செட்டில் இருக்கிறார். அதாவது இந்த சீரியலில் நடிகர் வேலராமமூர்த்தி சூட்டிங் வரும்போது எல்லாம் அவரை ஒரு ஈ சுற்றிக்கொண்டே இருக்கும். அவர் சில நேரங்களில் அதை விரட்டி விடும் போது டேக் எல்லாம் வாங்கி இருக்கிறார். வேறு யாரிடமும் அந்த ஈ போகாது அவர் ஒருவரை மட்டுமே அது சுற்றிக் கொண்டிருக்கும். அதனால் இது மாரிமுத்து சார் ஆத்மா தான் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என அந்த நடிகை பேசியிருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications