Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 வயசுல செஞ்ச தப்பு.. அடுத்த வருடமே மகனோடு நடுத்தெருவில்! ஆனால் அந்த நபர்! நடிகை தீபா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகையான தீபா பாபு தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பல கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். 16 வயதில் திருமணம் செய்து அடுத்த வருடமே ஆண் குழந்தை பெற்று எடுத்த தீபா கணவரின் கொடுமையால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து முதல் முறை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடிகையாக ஆரம்பமான புதியதிலேயே தான் திருமணம் செய்து விட்டதால் தன்னுடைய குடும்பத்தையும் பிரிந்து கணவரின் கொடுமையால் தன்னுடைய மகனை குழந்தையாக நடிக்க வைத்து அதில் கிடைத்த வருமானத்தில் தான் சாப்பிட்டதாக கண்ணீரோடு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

 actress Deepa Babu has shared about the many hardships she faced in her life

அந்த வகையில் சீரியல் நடிகையான நடிகை தீபா பாபு பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் தீபா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார். அவருடைய மகன் 15 வயதாக இருக்கும்போது இவர் திருமணம் செய்து இருக்கிறாரே என்று அதிகமாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவர் உருக்கமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் தனக்கு 14 வயது ஆக இருக்கும் போது தான் சீரியலில் அறிமுகமானேன். அப்போது ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 16 வயதில் தப்பான ஒருவரை தப்பான நேரத்தில் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அதற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை தவறாகத்தான் அமைந்தது. நான் என்னுடைய காதலுக்காக குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டதால் அவர்களும் என்னை வெறுத்து விட்டார்கள்.

ஆனால் நான் செய்த தப்பில் எனக்கு கிடைத்த ஒரு முத்து என்றால் என்னுடைய பையன் தான். கேட்டதிலும் கடவுள் கொடுத்த ஒரு பொக்கிஷம் அவன் தான். முதல் திருமணத்திற்கு பிறகு நான் உடனே கர்ப்பமானேன். அதனால் நடிக்கவில்லை. அதனால் நான் சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை நன்றாக இருந்தது. என்னுடைய குடும்பத்தினர்களே என்னை நன்றாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் 16 வயதில் நான் பண்ணுன தப்புனால என்னுடைய வாழ்க்கையே புரட்டிப்போட்டு விட்டது. என்னுடைய பையனுக்கு இப்போ 15 வயசு ஆகுது. ஆனா நான் எப்படி என்னுடைய பையனை வயிற்றில் வைத்திருந்தேன், பெத்தெடுத்தேன், வளர்த்தேன் என்பது கூட எனக்கு இப்போ ஞாபகம் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு ரேஷன் அரிசி வாங்கி கொடுப்பாங்க. அது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனால் அதையும் சகித்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

17 வயசில் என்னுடைய பையனை பெற்றெடுத்த பிறகு நானே என்னுடைய பையனை பார்த்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அத்திப்பூக்கள் சீரியலில் என்னுடைய குழந்தையை வேறு வழியில்லாமல் தான் நடிக்க வைத்து கிடைத்த சம்பளத்தில் தான் நாங்கள் சாப்பிட்டோம். அதையெல்லாம் தாண்டி நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கிறேன்.

முதல் கணவரை பிரிந்த பிறகு என்னுடைய குடும்பத்தினரும் என்னை பார்த்து கஷ்டப்பட்டார்கள். அவர்கள் என் மீது கோபம் பட்டார்கள் அந்த கோபம் நியாயமானது தான் என்று பேசிக் கொண்டிருந்த தீபா மேலும் பேசுகையில் கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயேஎனக்கு என்னுடைய முதல் கணவர் பற்றிய உண்மைகள் எல்லாம் தெரிய வந்தது.

பிறகு நான் அவரோடு வாழ முடியாது என்று சில மாதங்கள் கழித்து போலீஸ் மூலமாக பிரச்சனை வந்த போது என் தாலியை கழட்டி வீட்டை விட்டு அனுப்பினாங்க. ஆனால் அந்த நேரத்தில் நான் கர்ப்பம் ஆனதும் என்னுடைய அம்மா அப்பாவும் விட்டுட்டாங்க. நான் உயிரோடு இருக்க காரணமே என்னுடைய பையன் தான். அவனுக்கு நான்கு வயது இருக்கும்போது நான் நடிக்கப் போனேன். அப்போது அவனை சூட்டிங் கூட்டிட்டு போக முடியாது என்பதால் நான் பக்கத்து வீட்டில் ஒரு அக்காவிடம் தான் விட்டுவிட்டு போவேன்.

அந்த அக்கா அவனை பார்த்துக் கொண்டாங்க. பிறகு கொஞ்ச நாள் கழிச்சு அவனை ஹாஸ்டலில் விட்டுட்டு நான் நடிக்க வந்தேன். ஆனால் அதுவும் பல பிரச்சினைகள் வந்தது. ஹாஸ்டல்ல பையனை விட்டுட்டு இவ ஊர் சுத்துறா, வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறா என்று பேசுறாங்க. என்னுடைய முதல் வாழ்க்கையில் இருந்து நான் வெளியே வந்த போது ரோட்டில் என் பையனை வைத்துக்கொண்டு நின்னேன்.

யாரும் இல்லாமல் எதுவும் இல்லாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நான் யோசித்தேன் நாமும் படித்து வேலைக்கு போயிருந்தால் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து இருக்கலாம். ஆனா நான் பண்ணுன தப்பால இன்னைக்கு இவ்வளவு வேதனை வந்திருக்காது என்று யோசித்தேன்.

பிறகு அப்பா ஒருவன் இல்லாவிட்டாலும் நம்முடைய அம்மாவால் நம்மை இவ்வளவு சிறப்பாக வளர்க்க முடிந்திருக்கிறதே என்று என்னுடைய பையன் நினைக்கணும் என்று தான் முடிவு எடுத்திருந்தேன். அதற்கு பிறகு தான் ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் நடித்தேன். அந்த சீரியலில் எனக்கு 2500 ரூபாய் சம்பளம் தந்தாங்க அதுதான் என்னுடைய முதல் சம்பளமாக இருந்தது என்று அந்த பேட்டியில் தீபா எமோஷனலாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+