சூரியவம்சம் ஜோடி மறுபடியும்.. தேவயானி வெளியிட்ட திடீர் போஸ்ட்.. சரத்குமாரும் கலக்குறாரே.. செம அப்டேட்
சென்னை: சூரியவம்சம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதற்கு பிறகு சரத்குமார் மற்றும் தேவயானி பல படங்களில் நடித்தாலும் மீண்டும் சூரிய வம்சம் கூட்டணி என்று தேவயானி வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
காதல் திருமணம் செய்தால் பல்வேறு கஷ்டங்களும் சந்தோஷங்களும் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் செய்பவர்கள் பலரும் இப்ப வரைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் திரைப்படமாக சூரியவம்சம் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஒரே பாடலில் நம்ம சின்ராசு ஓகோனு கோடீஸ்வரர் ஆவதும், பாட்டு முடிவதற்குள் நந்தினி கலெக்டர் ஆகி விடுவதும் புரியாத புதிராக இருந்தாலும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆனா காட்சிகள் தான்.

சின்ராசுவின் காதலை உதாசீனப்படுத்திய அவருடைய முறை பொண்ணு சின்ராசிடமே பிறகே உதவிக்கு வருவது, அதுபோல இது ஒரு உதவாக்கரை இதை நம்பி வந்த இது ஒரு உதவாக்கரை என்று சின்ராசுவின் அப்பா திட்டி இருந்தாலும் பிறகு பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெத்துக்கணும் என்று அவரையே பெருமைப்பட வைத்த சின்ராசு மற்றும் நந்தினியின் காதல் கதை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
அதற்கு இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானி பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். அதுவும் பெரிய அளவில் அவர்களுக்கு பெயர் வாங்கி கொடுத்தது தான். இந்த நிலையில் இப்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் புது திரைப்படம் வழியாக இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களை நடிகை தேவயானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது சித்தார்த்தின் நாற்பதாவது படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கும் நிலையில் இந்தப் படம் சித்தார்த்தின் 40 ஆவது படமாக இருக்கிறது. சித்தார்த் சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதுவும் அவருக்கு பெயர் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் சித்தா திரைப்படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார்.
அதற்கு பிறகு இப்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் சித்தார்த்தின் நாற்பதாவது படத்தை இயக்குகிறார். அதேபோல சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் தயாரித்த சாந்தி டாக்கிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார், நடிகை தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் கன்னட நடிகை சைத்ரா அசார் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். அதுபோல இந்த பட பூஜையில் இயக்குனர் ராம், நிதிலன், சுவாமிநாதன், வெங்கட் பிரபு, மடோனா, அஸ்வின் ரவிக்குமார், எழுத்தாளர் நரேன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தான் சரத்குமார் மற்றும் தேவயானி இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதால் இது அவர்களுடைய ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications