டாக்டர்களே கைவிட்ட நிலையில் மகளை காப்பாற்றிய தெய்வம்..உருக்கமாக மனம் திறந்த நடிகை தேவயானி
சென்னை: நடிகை தேவயானி தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகள் டாக்டர்கள் கைவிட்ட நிலையில் கடவுள் தான் தன்னுடைய மகளை காப்பாற்றினார் என உருக்கமாக பேசியிருக்கிறார்.
மேலும் நடிகை தேவயானி கடவுளின் அருள் தன்னுடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் கிடைத்தது என்பது பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

வெள்ளி திரையில் கதாநாயகி ஆக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தேவயானி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் கதாநாயகி. இவர் நடித்த பல திரைப்படங்கள் இப்ப வரைக்கும் மறக்க முடியாது என்று ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்திருக்கிறது.
தற்போது சின்னத்திரையிலும் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து இழுத்து வரும் தேவயானி முதல் முதலாக 1995 ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்த வந்த இவர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தின் மூலமாக பாப்புலர் நடிகையாக மாறிவிட்டார்.
காதல் கோட்டை கமலியை இப்ப வரைக்கும் பலரும் மறக்க முடியாது என்று அவருடைய புகைப்படத்தை தங்களுடைய செல்போன்களின் ஹோம் பேஜில் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜீ தமிழில் சமீபத்தில் முடிவடைந்த புது புது அர்த்தங்கள் என்னும் சீரியலில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் கடவுளின் அருள் எந்த அளவிற்கு கிடைத்தது. கடவுள் நம்பிக்கை எவ்வளவு இருக்கிறது என்பது பற்றியும் ஒரு வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் தான் என்னுடைய வீட்டில் தினமும் ஆஞ்சநேயரை கும்பிட்டு வருவதாகவும், தனக்கு மனதிற்கு பிடித்த கடவுள் என்றால் அது காளிகாம்பாள் தான் என்றும் கூறியிருக்கிறார்.

தங்களுடைய வீட்டில் யார் வெளியே சென்றாலும் ஆஞ்சநேயரை சுற்றி கும்பிட்டு விட்டு தான் வெளியே செல்லுவோம். எங்கள் வீட்டில் தினமும் பூஜை நடக்கும் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் முதலில் சாமிக்கு வைத்து கும்பிட்டு விட்டு தான் சாப்பிடுவோம் என்று பல தகவல்களையும் கூறி இருக்கும் தேவயானி மேலும் காளிகாம்பாள் என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே முக்கியம். நான் இரண்டாவதாக தயாரித்த திரைப்படம் வெளியாகும் சமயத்தில் பெரும் பண நெருக்கடியில் தவித்து வந்தேன்.
அந்த நேரத்தில் கடவுளிடம் தான் நாங்கள் ரொம்பவே வேண்டினோம். அப்போது கடைசி நேரத்தில் எங்களுக்கு பணம் கிடைத்து இருந்தது. அதுவும் கடவுளின் அருளால் தான் என்று இப்பவரைக்கும் நம்பிக் கொண்டிருக்கிறேன். அதைவிட இன்னொரு முக்கியமான சம்பவமும் இருக்கிறது. அது என்னவென்றால் என்னுடைய இரண்டாவது மகளுக்கு ஒருமுறை டெங்கு காய்ச்சல் வந்திருந்தது.
அந்த நேரத்தில் அவளுடைய ரத்தத்தில் இருக்கும் அணுக்களின் அளவு நாளுக்கு நாள் ரொம்பவே குறைந்துவிட்டது. டாக்டர்கள் கூட ஒன்னும் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். அந்த நேரத்திலும் எங்களுக்கு அந்த கடவுள்தான் காப்பாற்றி ஒரே நாள் இரவுக்குள் குழந்தையின் உடல் நலத்தில் முன்னேற்றத்தை கொடுத்து வந்தார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications