சரிகமபவில் பாடிய தேவயானியின் மகள் இனியா.. பவதாரணியை நினைவு படுத்திய பாடல்.. நெகிழ வைத்த காரணம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை தேவயானியின் மகள் இனியா கலந்து கொண்டிருக்கிறார். இனியா பாடிய பாடலை கேட்டு ஒட்டுமொத்த அரங்கத்தினரும் அசந்து போய் இருக்கின்றனர். இளையராஜாவின் மகளான பவதாரணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை சிறப்பாக பாடி இனியா பலருடைய பாராட்டை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இனியா கலந்து கொள்வதற்கு என்ன காரணம் என்று தேவயானி பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அழுகாச்சி சீரியலுக்கு மாற்றாக ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் திறமையை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் அடிமட்டத்தில் இருக்கும் பலரும் போட்டி போடுகிறார்கள்.

சரிகமப போட்டியாளர்கள்
தங்களுடைய திறமையை உலகறிய செய்ய வேண்டும் என்று காத்திருக்கும் பலருக்காக சரிகமப நிகழ்ச்சி மேடை அமைத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாடி பலர் இப்போது சினிமாவில் முக்கிய பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். அதுபோல சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூனியர்களுக்கான நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது.
சரிகமப சீனியர் சீசன் 5
அதைத் தொடர்ந்து சீனர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதன் ஆடிஷனில் நடிகை தேவயானியின் மகளான இனியாவும் கலந்து கொண்டிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் இனியா அருமையாக பாடுவார் என்று பல இன்டர்வியூக்கலில் தேவயானி மற்றும் அவருடைய கணவர் ராஜகுமாரனும் கூறி இருக்கிறார்கள்.
தேவயானி மகள் பாடிய பாடல்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தேவயானி மகள் இனியா போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி இருக்கிறார். அந்த பாடலை கேட்டு அங்கிருந்த நடுவர்கள் அவரை பாராட்டி செலக்ட் செய்து இருக்கிறார்கள். பிறகு தான் தேவயானியின் மகள் என்பது அங்கிருப்பவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
தேவயானி சொன்ன வார்த்தை
அப்போது தேவயானியிடம் மேடம் நீங்க இந்த மேடையை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் இல்லாமல் இருக்காது என்று நாங்க நினைக்கிறோம் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு தேவயானி இந்த மேடை எல்லாருக்கும் ஈஸியா கிடைக்காது என்னோட மகள் அவளுடைய சொந்த முயற்சியால் மேலே வரணும் என்பது தான் என்னுடைய ஆசை. அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பினேன் என்று தேவயானி பேசி இருக்கிறார்.
ரசிகர்களின் பாராட்டு
நடிகை தேவயானி குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். அதேபோல அவருடைய மகளும் நடிப்பதற்காக தேவையான பயிற்சிகள் எடுத்திருக்கிறார். சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று இனியா பேட்டிகளில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய திறமையினால் தான் ஜெயிக்க வேண்டும் என்று அவர் எடுத்திருக்ககும் முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications