ராஜகுமாரன் மாமாவை புரிந்து கொண்டது இந்த இடத்தில் தான்! நகுல் உடைத்த ரகசியம்.. அப்போ அது வதந்தியா?
சென்னை: நடிகை தேவயானியின் தம்பியான நடிகர் நகுல் தன்னுடைய அக்கா தேவயானி கணவர் ராஜ குமாரனை தான் புரிந்து கொண்டது பற்றி முதல்முறையாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு நடிகை தேவயானிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஆரம்பத்தில் தேவயானிக்கு சிவசக்தி, தொட்டால் சிணுங்கி போன்ற திரைப்படத்தில் கிளாமர் ரோல் கிடைத்திருந்தாலும் அதற்கு பிறகு நான் இப்படி எல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியாக இருந்த தேவயானிக்கு கிடைத்தது எல்லாமே ஹோம்லி ஆன கேரக்டர் தான்.

அதனாலேயே இவர் ரசிகர்களின் மனதில் பசைப்போல ஒட்டிவிட்டார். அதிலும் தேவயானி என்றால் சாந்த சொரூபமான ஹோம்லி கேரக்டர் என்பது பலருக்கும் பிடித்து விட்டது. அதிலும் நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் இவர் துறுதுறுவென விஜய்யிடம் பேசுவது அதற்குப் பிறகு தன்னுடைய தங்கையின் காதலன் தான் தன்னை பார்க்க வந்த மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அவருக்காக தன்னுடைய ஆசையை விட்டுக் கொடுப்பது போன்று தேவயானி நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் ரசிகர்களை கவரும் வகையிலேயே நடித்து வந்தார்.
அப்போது புகழின் உச்சத்தில் இருந்த தேவயானி யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவருக்கும் அழகு பொருத்தம் இல்லை என்பது அந்த நேரத்தில் பலருடைய விவாதமாக இருந்தது. ஆனாலும் இவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டிலும் முதலில் சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில் பிறகு ராஜகுமாரன் வீட்டில் சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

ஆனால் தேவயானியின் வீட்டில் குழந்தை பிறந்த பிறகு தேவயானியை அவருடைய அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவயானியின் தம்பியான நடிகர் நகுல் ராஜகுமாரனுடன் பேசுவது இல்லை என்று சில வருடங்களுக்கு முன்பு ராஜகுமாரன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நகுலிடம் ராஜகுமாரன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் நகுல் பேசுகையில் எனக்கும் அக்காவுக்கும் ஏழு வருட வயது வித்தியாசம். எனக்கு அக்காவை பார்க்கும் போதே ஒரு மரியாதை இருக்கும். பெரிய அளவில் நாங்கள் க்ளோஸ் கிடையாது. அண்ணனோடு தான் நான் ரொம்ப க்ளோசாக இருப்பேன். அக்காவின் திருமணம் எனக்கு அந்த நேரத்தில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் நானும் மெச்சூர் இல்லாமல் இருந்தேன்.
அதனால் அந்த அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் இருக்கத்தான் செய்தது. பிறகு நான் புரிந்து கொண்டு விட்டேன். மாமாவும் நல்லவிதமாகத்தான் இருக்கிறார். அக்காவிற்கும் மாமாவிற்கும் இடையே இருக்கும் அன்பு பார்க்கும்போது எனக்கு சந்தோசமாகதான் இருக்கிறது. அதுபோல மாமா எல்லோரிடமும் பேசுவதை பார்க்கும் போது தான் அவர் மீது ஒரு பிடித்தம் ஏற்பட்டது.
மற்றபடி எனக்கு அவர் மீது தனிப்பட்ட எந்த கோபமும் கிடையாது. திடீரென்று நடந்த கல்யாணம் அந்த நேரத்தில் எனக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் இப்போது நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நான் எதையும் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டே இருக்கிறவன் கிடையாது. அதனால் இப்போது அக்காவும் மாமாவும் சந்தோஷமாக இருப்பது எங்களுக்கு எல்லோருக்குமே மகிழ்ச்சி தான் என்று அந்த பேட்டியில் நகுல் பேசியிருக்கிறார்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications