மகாநதி சீரியலில் இருந்து விலகும் திவ்யா கணேஷ்.. அவரே சொன்ன காரணம்! பாக்கியலட்சுமி சீரியல் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை திவ்யா கணேஷ் தான் சீரியலில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்றும் அவர் அதில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று மாறுவது புதிதல்ல. ஒரு சில வருடங்களாகவே சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல நடிகர்களால் தொடர்ச்சியாக ஒரே சீரியலில் நடிக்க முடியாத காரணம் ஏற்படுகிறது. அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும்போது சிலர் சீரியலில் இருந்து விலகுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் உடல் நில பிரச்சனை அல்லது குடும்ப பிரச்சனை காரணமாகவும் சீரியலில் இருந்து விலகுகிறார்கள். அந்த மாதிரி தான் இப்போது நடிகை திவ்யா கணேஷ் தான் நடித்து வந்த மகாநதி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

விஜய் டிவியில் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கம் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் ஏற்கனவே ஒரு நடிகை நடித்து வந்தார். அவர் திடீரென்று சீரியலில் விலகி இருந்தார் அவருக்கு பதிலாக நடிகை திவ்யா கணேஷ் அறிமுகம் ஆகியிருந்தார். திவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் ஜெனி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மகாநதி சீரியலில் நடிக்க இருப்பதால் பாக்கியலட்சுமி சீரியலில் அவர் நடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் அதிகமான இளைஞர்களை கவர்ந்த திவ்யா கணேஷுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் அந்த நேரத்தில் திவ்யாவிடம் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து வந்தனர். அதே நேரத்தில் தான் இரண்டு சீரியலிலும் நடிப்பை தொடர்வேன் என்று திவ்யா கணேஷ் கூறி இருந்தார். அதுபோலத்தான் தொடர்ந்து இரண்டு சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மகாநதி சீரியலில் கங்கா மற்றும் குமரன் கேரக்டருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் திவ்யா கணேஷ் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மகாநதி சீரியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். அதற்கு காரணம் தனக்கு டெங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உடல்நிலை பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் திவ்யா கணேஷ் கூறியிருக்கிறார்.
பாக்கியலட்சுமி: பாக்யா மீது பழியை போட்ட கோபி.. ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. சந்தோஷத்தில் ஈஸ்வரி
அதோடு இதுவரைக்கும் தனக்கு கங்காவாக ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி. அதே நேரத்தில் நான் இந்த சீரியலில் கங்கா கேரக்டரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். நான் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாததால் தான் இந்த கேரக்டரில் வேறு ஒருவரை சீரியல் தரப்பினர்கள் அணுகினார்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன். தொடர்ந்து ரசிகர்கள் கங்காவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன் இன்னொரு சீரியலில் ரசிகர்களை சந்திக்கிறேன் என்று திவ்யா கணேஷ் போஸ்ட் போட்டிருக்கிறார்.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் திவ்யா கணேஷ் விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதோடு பாக்கியலட்சுமி சீரியலிலும் இவருடைய காட்சிகள் ரொம்பவே முக்கியமானதாக இருக்கும்.
அதனால் இவர் பாக்கியலட்சுமி சீரியலிலும் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது இவர் இல்லாமலே இனி இவர் உடல்நிலை சரியாகி வரும் வரைக்கும் வேறு கோணத்தில் கதையை கொண்டு போவார்களா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இது குறித்து திவ்யா கணேஷ் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications