தலைகீழாக “வௌவால்” போல தொங்கிய ஃபரீனா.. பதறிப்போன ரசிகர்கள்.. காரணம் இதுதானா? இப்படி ஒரு பதிலா?
சென்னை: சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் தனக்கு குழந்தை பிறந்த பிறகு உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உடற்பயிற்சி செய்வது சரிதான் ஆனால் அது இவ்வளவு ஆபத்தான முறையிலும் செய்ய வேண்டுமா? என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் சில ரசிகர்கள் இந்த மாதிரி உடற்பயிற்சி செய்வது எங்களுக்கு மோட்டிவேஷனாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதிகண்ணம்மா சீரியலின் மூலமாக வெண்பா எனும் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டிய ஃபரீனா, இதற்கு முன்பு சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தார். தற்போது சின்னத்திரையில் ஒரு நீலாம்பரியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவருடைய கேரக்டருக்கு வரும் நெகட்டிவ் கமெண்ட்கள் எல்லாமே இவருடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இவர் கண்டுகொள்வதில்லை.
ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அணியும் ஆடைகளையும் அணிகலன்களையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் நடிக்கும் போது, இவர் தான் கதாநாயகி என்று இவருக்கு அதிகமாக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல இவர்தான் வில்லி என்று தெரிந்ததும் இவருக்கு அதிகமான நெகட்டிவர்ஸ் தோன்ற ஆரம்பித்து விட்டனர்.

சீரியல்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு திருமணம் முடிந்தது பல ரசிகர்களுக்கு தெரியாமல்தான் இருந்தது. இவருடைய கர்ப்பமான செய்தியை கேட்டு பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு இவர் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து இருக்கும் நேரத்தில் சீரியல்களில் இருந்து இவர் விலகி விடுவார் என்று ஒரு சில ரசிகர்கள் பீல் பண்ணி வந்தனர். ஆனால் அப்படி எல்லாம் நான் போக மாட்டேன் என்று இவர் தெளிவாக கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஃபரீனா தலைகீழாக தொங்கியபடியும், ஒரு காலை மட்டும் மேலே துணியில் கட்டியபடி இவர் கீழே தொங்கி கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள், என்னாச்சு கழுத்து அறுபட்ட ஆடு போல தலை கீழ தொங்குறீங்களே? என்று கலாய்த்து இருக்கின்றனர். அதற்கு கூலாக எமோஜிகளை ஃபரீனா கொடுத்திருக்கிறார்.
அதுபோல இன்னொரு ரசிகர், "காலில் போட்டு இருக்கும் தூக்கு கயிறை உங்க கழுத்தில் ஒரு தடவை மாட்டி வீடியோ போடுங்க" என்று சொல்ல, அதற்கு பதில் கொடுத்த இன்னொரு ரசிகர், "ஒரு முறை நீங்க அதுபோல கழுத்தில் மாட்டி வீடியோ போடுங்க. அதை பார்த்து ஃபரினா அக்கா வீடியோ போடுவாங்க" என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். அதற்கு பதில் கொடுத்த ஃபரீனா மேலே சொன்ன நபர் போல நெகட்டிவ் ஆக பேசுறவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம்.

தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் பதில் கொடுத்தால் அவர்களுடைய எனர்ஜி தான் நமக்கும் வரும். தேவையில்லாதவற்றை நாம் தள்ளி விட்டு விட்டு போய்விடுவோம் என்று தனக்காக சப்போர்ட் பண்ணுன ரசிகருக்கு ஃபரீனா அட்வைஸ் செய்திருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications