என்ன நடந்தாலும் உண்மையை அழிக்க முடியாது.. சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா போட்ட திடீர் பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை கோமதி பிரியா நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பொதுவாக சீரியல்களாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி அதில் தமிழ் நடிகைகளைவிட பிற மொழி நடிகைகள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது யாராலும் விளக்கப்பட முடியாத நிலை தான் இருக்கிறது. ஆனாலும் ஒரு சில தமிழ் நடிகைகள் தங்களுடைய கடின உழைப்பால் ரசிகர்களை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் நடிகை கோமதிப்பிரியா. இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கோமதி பிரியாவின் சொந்த ஊர் மதுரை தான். மதுரையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கோமதி பிரியா சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் பார்டைம் வேலை பார்த்துக்கொண்டு படித்து வந்தார். தன்னுடைய அப்பா ஹோட்டல் பிசினஸ் நடத்தி வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால் தன்னுடைய படிப்பிற்கும் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலையின் காரணமாகவும் மாடலிங் பண்ண தொடங்கிய கோமதி பிரியாவிற்கு விஜய் டிவியில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தலைகாட்ட வாய்ப்பு கிடைத்தது.
அதற்குப் பிறகு வேலைக்காரன், பாவம் கணேசன், ஓவியா போன்ற சீரியலில் நடித்து வந்த கோமதி பிரியாவிற்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல்தான். இந்த சீரியல் மூலமாக இப்போது பல குடும்பங்களில் மீனாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மருமகளோ அல்லது மகளோ நமக்கு கிடைக்க வேண்டும் என்று பலர் இவரை பற்றி புகழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

சிறகடிக்க ஆசை: ஸ்ருதி கொண்டு வந்த லெட்டர்.. ஆடி போன ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ்! ஆப்பு வைத்த முத்து
அதுபோல இந்த சீரியல் மூலமாகவே கோமதி பிரியாவிற்கு மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலின் டப்பிங் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருந்தார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி கோமதி பிரியா வெளிப்படையாக பேசவில்லை, என்றாலும் அவருக்கு உடல்நல பிரச்சனைகள் இருந்தபோது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் திடீரென்று அவருக்கு பதிலாக வேறு நடிகையை அந்த சீரியலில் நடிக்க வைத்து விட்டதாகவும் செய்திகள் பரவி வந்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக கோமதி பிரியாவிற்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் கேப்பில் போட்டோ சூட் நடத்தி அதை தன்னுடைய instagram பக்கத்தில் பகிர்ந்து வருவது தான் கோமதி பிரியாவின் வாடிக்கை.

சமீபத்தில் அதுபோலத்தான் பச்சை வண்ணத்தில் புடவை கட்டிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவிற்கு மக்கள் உங்கள் இமேஜை அழிக்கலாம், உங்கள் ஆளுமையை சேதபடுத்தலாம், உங்களைப் பற்றிய வதந்திகளை உருவாக்கலாம். ஆனால் உங்கள் நல்ல செயல்களை அவர்களால் ஒருபோது பறிக்க முடியாது.
கெட்டிமேளம்: வெற்றியை தப்பாக புரிந்து கொள்ளும் துளசி.. உறவென தெரியாமலேயே மலரும் பந்தம்
ஏனென்றால் அவர்கள் உங்களை எப்படி விவரித்தாலும் உங்களை நன்கு அறிந்தவர்களால் நீங்கள் எப்போதும் போற்றப்படுவீர்கள் என்று கூறியிருக்கிறார். என்னதான் அடுத்தவர்களை பற்றி தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும். அதனால் நீங்கள் செய்யும் நல்ல செயல்களை யாராலும் கெடுக்க முடியாது என்பது போன்று கோமதி பிரியா பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் அவருக்கு பலரும் ஹார்டின் பறக்கவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications