Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்டிமேளம்: வெற்றியை தப்பாக புரிந்து கொள்ளும் துளசி.. உறவென தெரியாமலேயே மலரும் பந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணி நேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு முதல் பார்வையிலேயே துளசி மீது காதல் உருவான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது வெற்றி விபத்தில் சிக்கிய மூன்று பேரையும் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறான். அதோடு துளசியை சந்திக்க வைத்ததற்காகவும் நன்றி சொல்கிறான். அடுத்து வெற்றி லக்ஷ்மியை சந்திக்க இருவரும் நடந்த விஷயங்களை சொல்லி கொள்கின்றனர்.

television sayasingh krishna

இங்கே அப்பாவையும் பாட்டியையும் பார்க்காததால் தியா பாப்பா அழுது கொண்டே இருக்க அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர், பாலமுருகன் நாய் போல் நடித்து காட்டியும் தியா சமாதானம் ஆகவில்லை. அஞ்சலி அவளை தூக்கி சென்று எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைக்க கடைசியாக தியா லட்சுமியை பாட்டி என அழைக்கிறாள்.

அடுத்து முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வர மூர்த்தி நியூஸ் பேப்பரில் விபத்து குறித்து செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பத்திரிகையாளர்களை அழைத்து பேசுமாறு தனது பி.ஏ-வை பிடித்து திட்டுகிறார். நியூஸ் பேப்பரையும் கிழித்து போட இதை அவரது மருமகள் கவனித்து எதோ தப்பா இருக்கே என்று யோசிக்கிறாள். அடுத்து மீனா வீட்டிற்கு வந்து துளசி கல்யாணம் நின்று போன கதையை சொல்கிறாள்.

television sayasingh krishna

மறுபக்கம் தற்போதைய எம்.எல்.ஏ வெற்றி செய்த விபத்தில் தான் துளசியின் மணமகன் இறந்து விட்டான் என்பது அறிந்து சிவராமன் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்க முடிவு செய்கிறார். கல்லூரி மாணவிகள் பேருந்து பிரச்சனை காரணமாக வெற்றியிடம் உதவி கேட்க வெற்றி பஸ்ஸை மடக்கி நிறுத்தி நடத்துனரை அடிக்க இதை துளசி பார்த்து வெற்றியை பற்றி தப்பாக புரிந்து கொள்கிறாள். வெற்றி துளசியை பார்க்க மீண்டும் அவன் பூ மழையில் நனைகிறான்.

அதனை தொடர்ந்து அஞ்சலியின் தோழிகள் வீட்டிற்கு வந்து கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பாட்டு போட்டியில் பங்கேற்க சொல்ல அஞ்சலி நோ சொல்கிறாள். துளசி அஞ்சலியிடம் பேசி சம்மதிக்க வைக்கிறாள். இங்கே வரதராஜன் கவினிடம் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த சொல்ல அவன் அப்பாவிடம் சண்டை போட்டு விட்டு காலேஜ் கிளம்பி வருகிறான்.

television sayasingh krishna

அஞ்சலியை சந்தித்து அம்மா செய்து கொடுத்து சுவீட்டுகளை கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+