ஏம்மா இப்படி சொல்லி ஒதுக்குறீங்க? உன்னை தொட்டு பார்த்தேனா? ஹரிப்பிரியாவிடம் ராதாரவி வருத்தம்
சென்னை: நடிகர் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்த வருணம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகை ஹரிப்பிரியா, ராதாரவியை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். அதற்கு ராதாரவி உன்னை நான் தொட்டு பார்த்தேனா? இப்படி என்னை ஒதுக்குறீங்களே என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ஹரிப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு இவர் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஆபீஸ் சீரியலில் அம்மாஞ்சி என்ற கேரக்டரில் நடித்து வந்த ஹரிபிரியா ஒரு சில சீரியல்களில் வில்லி கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு எதிர்நீச்சல் சீரியல்தான் பெரிய அளவில் பிரபலம் கொடுத்தது.

எதிர்நீச்சல் சீரியல் நந்தினி
எதிர்நீச்சல் சீரியல் மூலமாக நந்தினி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் வீட்டிற்குள் இத்தனை நாட்களாக போராடிக் கொண்டிருந்தனர். இப்போது வீட்டை விட்டு தைரியமாக வெளியே வந்து போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சோசியல் மீடியாவிலும் ஹரிபிரியா பயங்கர பிசியாக இருக்கிறார்.
வருணம் பட விழா
அடிக்கடி போட்டோ சூட் வீடியோக்கள் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதுபோல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஹரிப்பிரியா நடித்த "வருணம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இப்போது நடைபெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த திரைப்பட ஆடியோ வெளியீட்டின் போது திரைப்பட சூட்டிங்கில் நடந்த பல நிகழ்வுகளை ஹரிபிரியா பகிர்ந்து இருக்கிறார்.
ஹரிப்பிரியா மகிழ்ச்சி
அதில் ஹரிப்ரியா பேசுகையில், இந்த படத்தின் சூட்டிங் என்னால் மறக்கவே முடியாது. சூட்டிங்காக கிராமப்புறத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த மக்கள் எல்லோருமே எங்களிடம் ரொம்பவும் பாசமாக நடந்து கொண்டாங்க. சாப்பாடு எல்லாம் செய்து தந்திருக்காங்க. ஒரு நாள் சிவப்பு கலர் புடவை இருந்தால் நல்லா இருக்கும் என்று திடீரென்று இயக்குனர் சொன்னார்.
ராதாரவியின் வருத்தம்
அப்போது என்னிடம் அந்த புடவை இல்லையே என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அம்மா என்னிடம் இருக்கு இந்தாங்க கொண்டு போங்க என்று தந்தாங்க. இந்த அன்பு எல்லாம் பெரியது என்று பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து பேசிய ராதாரவி இந்த படத்தில் நடித்த ஹரிபிரியா என்னை பார்த்தால் பயமாய் இருக்கிறது என்று சொல்லி இருக்காங்க.
ராதாரவி பேச்சு
நான் என்னம்மா உன்னை பண்ணுனேன். நான் உன்னை தொட்டு பார்த்தேனா? இப்படி சொல்லி ஏம்மா என்னை ஒதுக்குறிங்க. நீங்க ஒரு இயக்குனர் கிட்ட ராதாரவி சாரை பார்த்தா பயமா இருக்குன்னு சொன்னா அவர் என்ன படத்தில் போடுறதுக்கு யோசிப்பாரு. அவர் நடிப்பை பார்த்தா பயமா இருக்குன்னு தெளிவா சொல்லுங்க. இல்லன்னா தப்பா புரிஞ்சுக்குவாங்க.

ஜாலியான வேண்டுகோள்
இனியாவது ஒரு இயக்குனரிடம் சொல்லும்போது ராதா ரவி ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவாரு, நல்லா பேசுவாரு, கலகலப்பா செட் இருக்கும் என்று சொல்லுங்க. அப்படியாவது எனக்கு வாய்ப்பு வரட்டும் என்று அந்த நிகழ்ச்சியில் ஜாலியாக ராதாரவி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications