தினமும் அழுதுட்டு.. அந்த குற்ற உணர்ச்சி! சீரியலை விட்டு விலக முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பகீர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டாவது பாகத்தில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே முதல் பாகத்திலும் மீனா கேரக்டரில் தான் நடித்திருந்தார். இந்த வேளையில் தான் இந்த சீரியலை விட்டு விலக நினைத்தேன் என்று சில காரணத்தை கூறி இருக்கிறார்.
பொதுவாக ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதனாலேயே அந்த சீரியல் அதிக நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடு ஒளிபரப்பானது.

ஜீவா- மீனா ஜோடி
இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தனர். அதேபோல இந்த சீரியலில் சில ஜோடிக்கு அதிகமான ரசிகர்களும் இருந்தனர். அதில் மீனா ஜீவா ஜோடிக்கு சொல்லவே வேண்டாம். கதிர் முல்லை ஜோடிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதே போல மீனா ஜீவாவுக்கு இருந்தனர். இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடிகை ஹேமா நடித்து வந்தார்.
நிஜத்திலும் கர்ப்பம்
இவர் இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அதனாலேயே முதல் பாகம் முடிவடைந்த பிறகு இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஹேமா சீரியலில் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தார். அதே நேரத்தில் அவர் நிஜத்திலும் கர்ப்பமாக இருந்தார்.

ரசிகர்களின் அட்வைஸ்
குழந்தை பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரைக்கும் சூட்டிங்கில் கலந்து கொண்ட ஹேமா குழந்தை பிறந்து ஒன்றரை மாதத்தில் மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதிலும் கொரோனா காலகட்டத்தில் இவர் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தது குறித்து அந்த நேரத்தில் அதிகமான ரசிகர்கள் இவருக்கு அட்வைஸ் கொடுத்து கொண்டிருந்தனர்.
விலக நினைத்த காரணம்
இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஹேமா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக நினைத்தேன் என்றும் அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பேசி இருக்கிறார். அதாவது முதல் பாகத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமாக இருந்த நிலையில் டெலிவரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரைக்கும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன் ஆனால் குழந்தை பிறந்த பிறகு நான் நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்.

குற்ற உணர்ச்சி
ஏனென்றால் நான் நடிக்கப் போய்விட்டால் என்னுடைய மகன் என்னை மறந்து விடுவான் என்று நான் நினைத்தேன். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அதெல்லாம் உன்னை மறக்க மாட்டான். நாங்கள் இருக்கிறோம் உனக்கும் உன் மகனுக்கும். அதனால் உன் மகனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ தைரியமாக போயிட்டு வா என்று சொன்னாங்க. ஆனாலும் சூட்டிங் நடிச்சிட்டு குழந்தையை தூக்கி பால் கொடுக்கும் போது எனக்கு அவ்வளவு குற்ற உணர்ச்சியாய் இருக்கும்.

தொடர்ந்த காரணம்
என் பையனை சரியா என்னால பாத்துக்க முடியல, அவனை நல்லபடியா என்னால் வளர்க்க முடியலையே என்று வருத்தமா இருக்கும். அந்த நேரத்தில் எனக்கு சீரியலில் நடிச்சவங்களும் நல்ல சப்போர்ட் செய்தார்கள். குடும்பத்தினரும் சப்போர்ட் செய்தாங்க. அதனால் தான் என்னால் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடிந்தது.

மறுப்பு சொல்ல முடியவில்லை
ஒன்றரை மாதம் கழித்து நான் சீரியலில் நடிக்க வந்தேன் அப்போ கூட எதுவும் சொல்லாமல் என்னுடைய காட்சிகளை எளிமையாக வைத்திருந்தார்கள். அதனால் தான் என்னால் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்க முடிந்தது. அதுபோல இரண்டாவது பாகத்தில் நீங்களும் நடிக்கணும் என்று சொன்னதும் என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என அந்த பேட்டியில் ஹேமா பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications