வீட்டை விட்டு போனது உண்மை.. மகன்கள் என் கூட தான்! அவங்க பாவம்! குடும்ப பிரச்சனையை பேசிய ஜெயம் ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஜெயம் ரவி தன்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு என்னுடைய விவாகரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம். எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள். பாடகி கெனிஷாவோடு தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்று பேசியிருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய பிறந்தநாளுக்கு முந்தைய நாள் மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைத்தள பக்கங்களில் போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதோடு விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் முறையிட்டு இருக்கிறார். இதற்கு இடையே பாப் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை தொடர்புபடுத்தி செய்திகள் வரத் தொடங்கியிருந்தது. ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்து வருகிறார்.

television Jayam ravi Aarthi

இந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் தொடர்பாக இன்று நடந்த விழாவில் ஜெயம் ரவி கலந்து கொண்டார். ஜெயம் ரவி அவருடைய விவாகரத்தை அறிவித்ததற்கு பிறகு கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு அவர் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அவர் இப்போது அதில் பேசி இருக்கிறார்.

முதலில் படத்தைப் பற்றி பேசிய ஜெயம்ரவி இந்த படத்தில் நான் வக்கீலாக நடித்திருக்கிறேன். உறவுகளை பற்றி பேசும்படம். குறிப்பாக அக்கா தம்பி இடையிலான பாசத்தை சொல்கிற படம். "மக்காமிஷி" பாடலுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலுக்கு என் கால் உடைந்து விடும் அளவிற்கு என்னை ஆட விட்டுவிட்டார். படம் நன்றாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி அவர் பேசுகையில் விவாகரத்து விஷயம் வருத்தம் அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் சில பிரச்சனைகள் எழுந்தன. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதை வெளியே சொல்ல முடியாது. என் பசங்களுக்காக நான் எதையும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பிரியும் முடிவை எடுத்துவிட்டேன்.

ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அவங்க அப்பாவும் வந்து பேசினார். அப்படி இருக்கையில் விவாகரத்து பற்றி அவருக்கு தெரியாது என எதற்காக சொன்னார் என தெரியவில்லை. விவாகரத்து விஷயம் எனக்கும் வருத்தம் தான் என்றாலும் அது என் சினிமா வாழ்க்கையை பாதிக்காது. அப்பா அம்மா நான் நல்லா இருக்கணும் என்று தான் நினைக்கிறாங்க. என் முடிவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மகன்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்.

என்னுடைய மூத்த பையனிடம் நாங்கள் பிரிவது பற்றி அவனுக்கு புரிகிறபடி பேசி இருக்கிறேன். அவன் இப்பொழுது ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளார். உண்மை ஒருநாள் கோர்ட் மூலம் வெளிவரும். இந்த கார், வீடு எல்லாமே நான் உழைத்து ரத்தம் சிந்தி சம்பாதித்தது. சோறு போடும் ரசிகர்களுக்கு முடிந்தவரை நான் உண்மையாக இருக்கிறேன் என்று பேசிக்கொண்டு இருக்கையில் சமீபத்தில் அவர் பாடகி ஜெனிஷா பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில் அந்த பொண்ணு பெங்களூரை சேர்ந்தவர். அவருக்கு அப்பா, அம்மா கிடையாது. ரொம்ப நல்ல பொண்ணு. நடிகர் ஜீவா ஒரு ஆல்பம் பண்ணினார். அந்த ஆல்பம் விழாவில் தான் அவர் எனக்கு பழக்கம் ஆனார். பாடகி என்பதை தாண்டி அவர் ஒரு சைக்யாட்ரிஸ்ட் உளவியல் ரீதியாக தனது பேச்சு மூலம் நிறைய பேரை குணப்படுத்தி உள்ளார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி கூட ஆரம்பிக்கலாம் என்று இருந்தோம்.

என்னை பற்றி என்ன வேணாலும் பேசுங்க அந்த பெண்ணை பற்றி மட்டும் அவதூறா பேசாதீங்க. நான் வீட்டை விட்டு போனது உண்மைதான்... என்னுடைய காரை எடுத்துக்கொண்டு பணம் கூட எடுக்காமல் தான் நான் சென்றிருந்தேன்... ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசினார்கள். அவருக்கு நிச்சயமாகி போய்விட்டார். அதற்குள் என் மீது சேற்றை வாரி இறைக்க சிலர் நினைக்கிறார்கள். இப்படி செய்வதால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது.

காரணம் என்னை பற்றி எனக்கு இந்த இடத்தை கொடுத்த மக்களுக்கும் தெரியும் என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியே வரும்போது வாழு வாழ விடு இதுல யாரையும் இழுத்து விடாதீங்க. என்னுடைய விவாகரத்தில் யாரையும் இழுக்க வேண்டாம். எனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்க என்று பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+