குழந்தை கர்ப்பப்பையில் இல்ல! டாக்டர் சொன்ன வார்த்தை! அந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது.. ஜூலி எமோஷனல்
சென்னை: நடிகை ஜூலி பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு தான் இப்போது கர்ப்பமாக இருப்பது குறித்து பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த ஜூலியின் நிஜப் பெயர் விசாலாட்சி தான். ஆனால் எல்லோருக்கும் அவரை ஜூலி என்றால் தான் தெரியும். ஆரம்பத்தில் இவர் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் டான்ஸர் ஆகவும் இருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

அதற்கு பிறகு தான் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பல சீரியகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜூலி சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். பிறகு சத்யா சீரியல் மற்றும் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய கணவரோடு கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது தங்களுடைய திருமணத்திற்கு பிறகு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் தாங்கள் பட்ட கஷ்டம் குறித்து பேசி இருக்கும் ஜூலி இப்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இரண்டு முறை கர்ப்பமாகியும் அந்த கர்ப்பம் தனக்கு நிலைக்கவில்லை என்று கண்ணீரோடு ஜூலி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுவதில், நானும் என்னுடைய கணவரும் லேட் ஆகத்தான் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. அதனாலேயே வாய்ப்பு தேடி இரண்டு வருடங்களாக நாங்கள் அலைந்து கொண்டிருந்தோம். அப்போது குழந்தையை பற்றி நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே பார்க்கிறவர்கள் எல்லோரும் குழந்தையை பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் நாங்கள் அப்போது பெரியதாக நினைக்காமல் வேலையை தேடி ஓடிக் கொண்டிருந்தோம். அப்போது முதல் முறை கர்ப்பமானோம். அது 45 நாளில் அபார்ஷன் ஆகிவிட்டது. எனக்கு உடல் ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தது. எனக்கு தைராய்டு பிரச்சனை இருந்ததால் பீரியட்ஸ் சரியாக வராமல் இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 5 மாதங்களுக்கு ஒரு முறை என்றுதான் பீரியட்ஸ் வந்து கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் பிறகு குழந்தை என்ற ஆசை வந்த பிறகு நாங்கள் அதற்காக சிகிச்சைகளை எடுத்தோம். அப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமானேன். ஆனால் ஸ்கேன் பார்க்கும்போது குழந்தை கர்ப்பபைக்குள் இல்லை டியூப்பில் இருக்கிறது என்று சொல்லி குழந்தையை அபார்ஷன் செய்ய சொல்லி விட்டார்கள்.
ஹாஸ்பிடலுக்கு செக்கப் போன இடத்தில் என்னுடைய டீடெயில்ஸ் எல்லாம் வீட்டில் இருப்பதை எடுத்துட்டு வர சொல்லி இருந்தார்கள். என்னுடைய கணவர் வீட்டிற்கு போய் குழந்தையை நினைத்து ரொம்பவே கதறி அழுது இருக்கிறார். அடுத்த நாள் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் சொன்னார்கள். இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வரக்கூடாது. பிறகு அபார்ஷன் பண்ணின குழந்தையை என்னுடைய கணவரின் கையில் கொடுத்த போது அவர் கதறி துடித்து விட்டார் என்று ஜூலி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
அதனாலேயே இப்போது நாங்கள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஆரம்பத்தில் வெளியே சொல்லவில்லை. பூச்சூடல் எல்லாம் முடிந்த பிறகு தான் இந்த விஷயத்தை வெளியே சொன்னோம். ஆனால் இப்போது எல்லோரும் எங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சிலர் அறிவுரைகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஜூலி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications