ஜோதிகா வீட்டில் விசேஷம்.. குவிந்த நட்சத்திரங்கள்.. எந்த நடிகையிடமும் இல்லாத சூப்பர் குணம்: பிரபலம்
சென்னை: ஜோதிகா வீட்டில் திரை பிரபலங்களுக்கு விருந்து வைக்கப்பட்டுள்ளது... இதில், திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா, பிருந்தா மாஸ்டர், DD, ரம்யா என ஏகப்பட்ட பேர் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால், எதற்காக இந்த விருந்தை அவர்கள் வைத்தார்கள் என்பது தெரியவில்லை. அதேபோல, நடிகைகளுக்கு நடிகர்களை போல அதிக சம்பளம் தரப்படுவதில்லை என்று சமந்தா சமீபத்தில் கூறியிருந்தார்.. இந்த இரு நிகழ்வுகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா இயக்குனர் பிவி நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சமந்தா தனது திரிலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இவரது தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் ஆண் பெண் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.

அதாவது, நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளது, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், BBTCinema யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "விருந்து கொடுப்பது என்பது இயல்பான விஷயம்தான்.. ஆனால் எதற்கான விருந்து என்பது தெரியவில்லை.
டேமேஜ் நயன்தாரா பெயர்
சமீபகாலமாகவே நயன்தாராவின் பெயர் டேமேஜ் ஆகி கொண்டு வருகிறது. சகநடிகைகளை கேவலப்படுத்துவதாகவும், துணை இயக்குனர்களை கேவலப்படுத்துவதாகவும் நயன்தாரா மீது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.. மூக்குத்தி அம்மன் பட பூஜையில் மேடையிலேயே மீனா, ரெஜினா உள்ளிட்ட நடிகைகளை அவமானப்படுத்தியதையும் பார்த்தோம்.
இப்படி சக நடிகைகளை நயன்தாரா அவமானப்படுத்தி கொண்டிருக்கும் சூழலில், சக நடிகைகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து மரியாதை தரலாம் என்றுகூட ஜோதிகா நினைத்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு விசேஷம் ஜோதிகா வீட்டில் நடந்திருக்கலாம். இதற்காகவும் சக நடிகைகளை அழைத்திருக்கலாம்.
ஜோதிகா தவிர வேறு யாருமில்லை
ஆனால், ஜோதிகா மீது நெகட்டிவ் பார்வை வீசப்படுவது என்பது வழக்கமாகி உள்ளது.. தயாரிப்பாளர் கே.ராஜன் ஒருமுறை மேடையில் பேசும்போது சொன்னார், படம் தோல்வியடைந்துவிட்டால், பாதி பணத்தை திருப்பி தரக்கூடிய ஒரே நடிகை ஜோதிகாதான். என்றார். பெரும்பாலும் நடிகைகளுக்கு 90 காலகட்டத்தில் பெரிய சம்பளம் கிடையாது. அப்படியிருந்தும்கூட, தோல்வியடைந்த படத்தயாரிப்பாளரை அழைத்து, பணத்தை பாதியாக தந்து, அவர்களது சுமையை குறைக்கக்கூடியவர் ஜோதிகா.. இந்த குணம் திரையுலகில் வேறு எந்த நடிகைக்கும் கிடையாது...
நெகட்டிவ் பார்வை ஏன்
எப்போதுமே ஜோதிகா பேசுவதை நெகட்டிவ்வாகவே பார்க்க முடியாது.. வெப்சீரிஸில் சிகரெட் பிடித்ததாக சர்ச்சை கிளம்பியது. அதுபோன்ற விவகாரங்களை ஜோதிகா தவிர்த்து கொள்வது நல்லது. காரணம், அவர் வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு உயர்ந்த நபரின் குடும்பத்தில் வந்த மருமகள்.. தமிழ் சினிமாவின் பெரிய ஸ்டாரின் மனைவியும்கூட, 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். அதனால் சர்ச்சைகளை தவிர்த்துகொள்ளலாம்.
எனினும், ஜோதிகா செய்யும் அனைத்தையுமே விமர்சிக்கவே பலர் இருக்கிறார்கள்.. இப்போது ஜோதிகா நடிகர்-நடிகைகளை அழைத்து விருந்து வைத்துள்ளார்.. அது நல்ல விஷயம்தானே? சர்ச்சைகளில் நடிகைகள் சிக்குகிறார்கள் என்றால், அவர்கள் லைம்லைட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
வெறுக்கக்கூடிய நடிகை
ஆனால் நயன்தாரா போன்றோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுகிறது என்றால், அவர்கள் சினிமாவை விலகி போகிறார்கள் என்று அர்த்தம். வெறுக்கக்கூடிய அளவுக்கு விமர்சனங்கள் வரும்போது, நடிகைகள் யாராக இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமந்தாவை பொறுத்தவரை, மிகவும் தாமதமாக சம்பள விஷயத்தை பேசியிருக்கிறார்.. ஹீரோவுக்கு 150 கோடி சம்பளம் என்றால், ஹீரோயினுக்கு 5 கோடி மட்டுமே தரப்படுகிறது. இது எவ்வளவு பெரிய அநீதி?
மலையாள படங்களில் பகிர்ந்தளிப்பு
மலையாள படங்களில் இப்படியெல்லாம் கிடையாது.. ஓரளவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.. இங்கே பெரிய அளவில் சம்பளத்தில் வித்தியாசம் உள்ளது... பெரும்பாலான படங்கள் தோல்வியடைய காரணமே இதுதான்.. நடிகர்களுக்கு மட்டும் கோடி கோடியாக வாங்கி கொண்டு, நடிகைகளுக்கு மட்டும் சொற்ப சம்பளம் ஏன்? சமந்தா இப்போதுதான் இதை கேள்வியாக கேட்க துவங்கியிருக்கிறார்..
சினிமா துறையில் மட்டும்தான் இந்த பாகுபாடு உள்ளது.. எல்லாருடைய பங்களிப்பும் இருந்தால்தான், ஒரு படம் வெற்றி படமாகும்.. வெறும் ஹீரோவால் மட்டுமே படம் ஓடுவதில்லை.. பலரது உழைப்பும்தான் வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், வெளிச்சமான உலகமாக சினிமா பார்க்கப்பட்டாலும், இருட்டில்தான் பலர் வாழ்ந்து வருகிறார்கள். சொற்ப சம்பளத்தை வாங்கி கொண்டு, வாடகை கூட தர முடியாமல் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த நிலைமை மாற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications