மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா.. இணையத்தில் ட்ரோலாகும் சிகரெட் பிடிக்கும் காட்சி!
சென்னை: நடிகை ஜோதிகா நடித்த வெப் சீரிஸில் சிகரெட் பிடிக்கும் காட்சியில் ஜோதிகா நடித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகா பேசிய பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது இந்த புகைப்படமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை ஜோதிகா 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவர். ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். புகழின் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிவகுமாரின் மருமகள்
அதுபோல ஒரு சில திரைப்படங்களில் நடிகர் சிவகுமார் உடன் நடித்து அவருடைய குடும்பத்திலேயே மருமகளாக மாறிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது தன்னுடைய குழந்தைகளின் படிப்புக்காக மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இதனால் சூர்யா மற்றும் ஜோதிகா சிவகுமார் உடன் சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விட்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
அதே நேரத்தில் குடும்ப பங்க்ஷனில் ஜோதிகா, சூர்யா குடும்பத்தோடு கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதுபோல சூர்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார் அதற்காக பேசும்போது கோவில்களுக்காக செலவழிக்கும் பணத்தை குழந்தைகளின் படிப்புக்காக செலவழிக்கலாம் என்று ஜோதிகா பேசியிருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

ஜோதிகா பேட்டி
அதேபோல சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் வெளியான போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தது அது குறித்து ஜோதிகா பேசும்போது தன்னுடைய கணவர் நடித்த திரைப்படத்தை சிலர் சமீபகாலமாக வேண்டும் என்று குறை சொல்கிறார்கள். அந்த படத்தை முழுமையாக பார்த்துவிட்டு குறை சொல்லலாம் என்று ஜோதிகா பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நடிப்பை தொடங்கிய ஜோதிகா
ஆனாலும் என்னதான் தங்களை பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத ஜோதிகா இப்போது தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா இப்போது டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

வெப் சீரிஸில் நடிப்பு
இந்த சீரிஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது ஷபானா ஆஸ்மியுடன் ஜோதிகாவும் கலந்து கொண்டார். அதுபோல இந்த வெப்சீரிஸில் பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் சீரிஸும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கிறது என்று ஜோதிகா கூறி இருக்கிறார்.

புகைப்பிடிக்கும் ஜோதிகா
அதே நேரத்தில் இந்த சீரிஸில் ஒரு காட்சியில் ஜோதிகா புகைபிடிப்பது போன்று நடித்திருக்கிறார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் ஜோதிகாவா இப்படி நடித்திருக்கிறார்? என்று அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் சிகரெட் பிடிப்பதை கூட பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இப்போது நடிகைகள் சிகரெட்டு பிடிக்கும் காட்சிகளும் திரைப்படங்களில் அதிகரித்து வருவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் வருத்தம்
தமிழ் சினிமாவில் கெத்தான கேரக்டரிலும் காதல் காட்சிகளிலும் நடித்து வந்த ஜோதிகா பாலிவுட் போனதும் இந்த அளவிற்கு இறங்கி விட்டாரே என்று சிலர் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். இதுபோல சில நாட்களாகவே ஜோதிகா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் போடும் கமெண்ட்டுகளுக்கும் ஜோதிகா பதில் கொடுத்து வருகிறார்.













Click it and Unblock the Notifications