Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகுமாருக்கு சங்கடம்? ஜோதிகா டிரஸ் பற்றி கவலைப்பட வேண்டியது சூர்யா.. இதுல உனக்கென்ன கஷ்டம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை திரையில் பார்ப்பதைவிட, திரைமறைவில் பார்ப்பதையே ரசிகன் விரும்புகிறான்.. ஜோதிகா மீதும் அப்படித்தான்.. ஏதாவது ஜோதிகா மீது கிசுகிசு இருக்குமா? என்றே ரசிகர்கள் தேடுகிறார்கள்.. குறிப்பாக கிசுகிசு இல்லாதவர்கள் மீது கிசுகிசு இருக்கிறதா? என்பதைதான் ரசிகர்கள் தேடுகிறார்கள்.. ஆனால் கிசுகிசு இல்லாத குடும்பம் சிவக்குமார் குடும்பம்தான்.. அந்த குடும்பத்தின்மீது திரையுலகினர் அத்தனை பேருக்கும் பெரும் மதிப்பு உள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

தன்னுடைய குழந்தைகளின் படிப்புக்காகவும், பெற்றோருடன் துணையாக இருக்கவும் ஆசைப்பட்டு மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா.. அங்கேயே தங்கி, பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். மற்றொருபக்கம் சூர்யாவும் பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

Television jyotika sivakumar

இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் சீஷெல்ஸ் எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு தங்களது ரொமான்டிக் போட்டோக்கள், வீடியோக்களையும் இணையத்தில் ஷேர் செய்திருந்தனர். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ரசித்து வரவேற்றாலும், ஒருசிலர் ஜோதிகாவின் உடை குறித்து விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் பாண்டியன், "ஜோதிகாவை பொறுத்தவரை சிவகுமார் குடும்பத்திற்கு கடுகளவும் குறைவில்லாத மருமகள்தான்..

தஞ்சாவூர் கோபம்

தஞ்சாவூருக்கு ஷூட்டிங் சென்றிருந்தபோது, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுடன் நாய்களும் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று, ராஜராஜன் கோயில் பெருமை நமக்கு தேவையா? என்ற கருத்தை சொன்னார்.. இது தமிழகமெங்கும் தீயாய் பற்றிக்கொண்டது.

நியாயமான கோபம்

ஜோதிகாவின் கோபம் உண்மையான, நியாயமான கோபமாகும்.. ஜோதிகாவின் அப்பா படத்தயாரிப்பாளர்.. வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும், ஜோதிகாவுக்கு மேட்டுக்குடி மனநிலைமை கிடையாது..

உடைகளை பற்றி கேட்கிறீர்கள்.. ஃபிலிம்பேர் சினிமா நிகழ்ச்சியில் புடவையை போர்த்தி கொண்டு சென்றால், ஜோதிகா சினிமாவிலிருந்து ரிடையர் ஆகிவிட்டார் என்று நினைத்துவிடுவார்கள்.. சினிமா என்பதே கிளாமர்தானே? சினிமா நடிகர், நடிகைகளின் கிசுகிசுவைதான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்..

Television jyotika sivakumar

ஜோதிகா உடை

பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், ஜோதிகா உடையணிந்து செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம்.. அதை பற்றி கவலைப்பட வேண்டியது சூர்யா, சூர்யாவின் 2 குழந்தைகளும்தான்.. அவர்களே கவலைப்படாதபோது ரசிகர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இதுவரை ஜோதிகா மீது ஏதாவது கிசுகிசு வந்ததா?

ஆனால், நக்மா மீது அதிகமான கிசுகிசு வந்தது.. சொல்ல முடியாத அளவுக்கு விமர்சனங்களும் வந்தன.. அப்படியிருக்கும்போது எந்த விமர்சனமும் ஜோதிகா மீது கிடையவே கிடையாது. சிவக்குமார் குடும்பத்துக்கேற்ற மருமகள்..

தன் 2 பிள்ளைகளும் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகுதான் மும்பைக்கே சென்றுள்ளார் ஜோதிகா.. காரணம், பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் உள்ளது.. பல கோடி ரூபாய் சொத்து உள்ளபோது, வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளவே விரும்புவார்களே தவிர, கட்டுப்பாடாக சென்னையில் தி.நகர் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமான கட்டுப்பாடு கிடையாது..

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

திரைவிமர்சனம் என்பது திரை கலைஞர்களை விமர்சனம் செய்வது என்றாகிவிட்டது.. 60 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் இருந்தார்.. ஒட்டுமொத்த திரையுலகமே லட்சுமிகாந்தனை கண்டு நடுங்கியது.. இந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்எஸ் கிருஷ்ணன் போன்றோர் ஜெயிலுக்கு சென்று, சேப்ட்டரே முடிந்துவிட்டது.

Television jyotika sivakumar

எனவே சினிமாவை திரையில் பார்ப்பதைவிட, திரைமறைவில் பார்ப்பதையே ரசிகன் விரும்புகிறான்.. ஜோதிகா மீதும் அப்படித்தான்..

ஏதாவது ஜோதிகா மீது கிசுகிசு இருக்குமா? என்றே தேடுகிறான்.. குறிப்பாக கிசுகிசு இல்லாதவர்கள்மீது கிசுகிசு இருக்கிறதா? என்பதைதான் ரசிகர்கள் தேடுகிறார்கள்.. ஆனால் கிசுகிசு இல்லாத குடும்பம் சிவக்குமார் குடும்பம்தான்.. அந்த குடும்பத்தின்மீது திரையுலகினர் அத்தனை பேருக்கும் பெரும் மதிப்பு உள்ளது.

பிலிமாலயா வல்லபன்

பிலிமாலயா சினிமா பத்திரிகையின் ஆசிரியர் எம்ஜி வல்லபன்.. அந்த காலத்திலேயே 1 லட்சம் பத்திரிகையை விற்றவர்.. யாரிடமும் கை நீட்டி காசு வாங்க மாட்டார்.. வறுமையில் கஷ்டப்பட்டபோது, அவரது மகனுக்கு லயோலா காலேஜ் பீஸ் மொத்தத்தையும் சூர்யாவை விட்டு கட்ட சொன்னார் சிவக்குமார். அப்போது சூர்யாவும் அதே காலேஜில்தான் படித்து கொண்டிருந்தார்.

அந்தவகையில் திரையுலகில் மிக கண்ணியமான குடும்பம் சிவகுமாரின் குடும்பம்.. எனவே ஜோதிகா உட்பட யார்மீது விமர்சனம் வந்தாலும், அதை கடந்து போவதுதான் நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+