விடிய விடிய அடிச்சு சித்திரவதை செஞ்சான்.. தன் காதல், பிரிவு குறித்து வெளிப்படையாக பேசிய காஜல் பசுபதி
சென்னை: நடிகை காஜல் பசுபதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் காதலித்த நபர்களால் பட்ட கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். தன்னுடைய முதல் காதலில் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்த பிரேக்கப் வரைக்கும் நடந்த பல விஷயங்களை பற்றி காஜல் பசுபதி பேசி இருப்பது தான் இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
சினிமா துறையில் இருக்கும் ஒரு சில நடிகர், நடிகைகள் தான் எந்த இடத்திலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். அதனாலேயே அவர்களிடம் பேசுவதற்கு பலர் பயந்து போய் இருப்பார்கள். இவரிடம் போய் நாம் பேச வேண்டுமா? வாயை கொடுத்து மாட்டி விடக்கூடாது என்பதற்காகவே அவரை பார்த்தாலும் கூட கண்டு கொள்ளாமல் போய் விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை காஜல் பசுபதி.

காஜல் பசுபதி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சின்ன திரையில் அறிமுகம் ஆகி ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் முதல் முறையாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான் காஜல் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுக்க நடித்திருப்பார்.
அதைத் தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை, கலகலப்பு 2 என பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னோடு டிவி நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
காஜல் பசுபதி சாண்டி மாஸ்டரை பிரிந்த பிறகும் தான் அதிகமாக சாண்டி மீது அன்பு வைத்ததால் தான் எங்களுக்குள் பிரிவு வந்தது என்று பல இடங்களில் சாண்டி மாஸ்டர் குறித்து பெருமையாக தான் பேசியிருக்கிறார். அதுபோல சாண்டி மாஸ்டர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணிடமும் காஜல் நட்பாக இருந்து வருகிறார்.
அதுபோல காஜல் பசுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். சமீபத்தில் அவர் பிரபல சேனல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கிறார் அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் காதல் வாழ்க்கை குறித்து காஜல் பேசுகையில் சாண்டிக்கு முன்பே என்னுடைய வாழ்க்கையில் மூன்று நான்கு காதல் வந்தது. அது எல்லாமே சாண்டிக்கு தெரியும்.
அந்த வாழ்க்கையில் எல்லாம் நான் ரொம்பவும் அவர்கள் மீது அதிகப்படியான பாசம் வைத்திருந்தேன். அதனாலையே எனக்கு அவர்களோடு பிரிவு ஏற்பட்டது. நான் ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்குள்ளும் காதல் ஏற்பட்டது. அப்போது என்னை காதலிப்பவர்கள் சில வருடங்கள் என்னோடு இருக்கிறார்கள். பிறகு வேறு ஒரு பொண்ணு வந்ததும் என்னை விட்டுப் போய் விடுகிறார்கள்.
நானும் பிறகு கொஞ்ச நாட்கள் தனியாக இருப்பேன் பிறகு இன்னொருவருடைய அன்பை பார்த்ததும் எனக்கும் காதல் ஏற்பட்டு விடுகிறது. அவர்களிடம் எல்லாம் நான் ரொம்பவும் பொசஸ்னஸ் ஆக இருந்ததுதான் அவர்கள் என்னை பிரிந்து போவதற்கு காரணம். ஆனால் அதனால் சாண்டிக்குப் பிறகு நான் ஒருவரை காதலித்தேன். அவர் மீது எந்த பொசஸ்னஸ் இருக்க கூடாது என்று நினைத்து நான் அவரிடம் உனக்கு முழு ஃப்ரீடம் கொடுக்கிறேன்.
அதுபோல நானும் முழு ஃப்ரீடமாக இருப்பேன் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அவர் நீ ஏன் அவங்க கிட்ட எல்லாம் காதலிச்ச மாதிரி என்ன காதலிக்கல என்று என்னை அடிப்பான். நான்கு வருடங்கள் ஒரு நபரை காதலித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய பிறந்தநாள் அன்று மனதில் வைத்திருந்த மொத்த கோவத்தையும் கொட்டி என்னை அடித்து விட்டான். இரவு முழுக்க என்னை அடித்து விட்டு அடுத்த நாள் நான் அவனை அடித்தேன் என்று வெளியே போய் சொல்லி விட்டான்.
காதலிக்கிறவர்களிடம் ரொம்பவும் பொசஸ்னஸ் ஆக இருந்தாலும் தப்பு என்று சொல்றாங்க இல்லனாலும் தப்பு என்று சொல்லுறாங்க நான் என்னதான் பண்ணுவது? என்று தெரியலையே என்று வழக்கமான அவருடைய கலகல சிரிப்போடு அந்த பேட்டியில் காஜல் பேசியிருக்கும் நிலையில் காஜலின் வெளிப்படையான பேச்சுக்கு சிலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications