அரசு கொடுத்த சிக்கல்.. கனகா கேட்ட ஒரே ஒரு உதவி.. அதை பண்ணிட்டா போதும்.. நடிகை குட்டி பத்மினி எமோஷனல்
சென்னை: நடிகை கனகா பல வருடங்களாக எங்கே போனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடிகை குட்டி பத்மினியை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது குட்டி பத்மினியிடம் தனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் வேண்டும் என்று நடிகை கனகா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதில் அரசாங்கத்தில் தனக்கு கொடுத்த பிரச்சனையும் அதிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கனகா வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அது என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக நடிகை ராதிகா, அம்பிகா, ராதா போன்றோர் இருந்த காலகட்டத்தில் அறிமுகமாகி குறுகிய காலத்திற்குள் அதிகமான ரசிகர்களை நடிகை கனகா கவர்ந்திருந்தார். அவருடைய குறும்புத்தனமான நடிப்பு அழகான தோற்றம் வசீகரிக்கும் கண்கள் அவரை பல திரைப்படங்களில் பார்ப்பதற்கு ரசிகர்களின் மத்தியில் ஆவலை கூட்டியது.
அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் கனகாவிற்கு அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் கனகா நடித்திருந்தார். ஆனால் கடைசியாக கூலி திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கனகா என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஆனாலும் திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையிலும் கனகா நுழையவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கனகாவின் தந்தையோடு ஏற்பட்ட சொத்து பிரச்சனையின் போது தான் கனகா மீண்டும் வெளி உலகத்திற்கு வந்தார். அப்போது கனகாவை பார்த்த அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். காரணம் கனவு கன்னியாக கனகாவை பார்த்திருந்த நிலையில் அவரின் அப்போதைய தோற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இது கனகா தானா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு சில வருடங்களாகவே கனகா காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து இருந்தார். அது குறித்து குட்டி பத்மினி இப்போது பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் கனகாவின் வீடு ஐந்தாறு பூட்டுகளை கொண்டுதான் பூட்டி இருக்கும்.
என்னுடைய youtube ரசிகர்கள் கனகாவை பார்த்து சந்தித்து ஒரு வீடியோ வெளியிட சொல்லி அடிக்கடி கேட்டுக்கொள்கிறார்கள். நானும் அந்த வீட்டு பக்கமா போய் பார்த்தால் அது அருந்ததி பட அரண்மனை வீடு போன்று இருக்கிறது. ஒருவேளை சுவர் ஏறி குதித்து போக வேண்டும் என்று நினைத்தாலும் உள்ளே நாய்கள் இருக்குமோ என்று அச்சம் இருக்கிறது. அப்படியே போனாலும் மெயின் கதவும் பூட்டி தான் இருக்குமாம்.
ஆனால் மாலை நேரத்தில் மட்டும் வீட்டிற்குள் லைட் எரிந்து கொண்டிருக்குமாம். அதை பார்ப்பதற்கு பாழடைந்த பங்களா மாதிரி தான் இருக்குமாம். இதனால் பல வருஷமா நானும் எப்படியாவது கனகாவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கிடைக்காத நேரத்தில் அன்று இரண்டு மணி நேரம் காருக்குள் உட்கார்ந்து இருந்தபோது கனகா ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்.
அப்போது எனக்கு கனகாவை சரியாக அடையாளம் தெரியவில்லை. அந்த அளவிற்கு உடல் எடை கூடியிருந்தார். ஆனால் கனகா என்னை பார்த்ததும் குட்டி பத்மினி அக்கா என்று என்னை கூப்பிட்டார். பிறகு இருவரும் ஒரு காபி ஷாப்பிற்கு போய் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தன்னுடைய அப்பாவோடு சமாதானமாகிவிட்டேன் என்று கனகா சொன்னார். எனக்கு அதுவே பெரிய சந்தோஷமாக இருந்தது.
கனகா இப்போது இருக்கும் வீடு 11 கோடி இருக்கும். அதை விற்று விட்டு ஒரு புதிய பிளாட் வாங்கலாமே என்று கனகாவிடம் கூறினேன். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி, ஆனால் என்னுடைய ஒரு இடம் அரசு ஆக்கிரமித்திருக்கிறது. அதை மட்டும் வாங்கி கொடுங்கள் என்று கனகா கேட்டாராம்.
உடனே அதற்கு குட்டி பத்மினி இப்போது இருக்கும் அரசு நமக்காக எது வேண்டுமானாலும் செய்யும். அதை நான் மீட்டு தருகிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் கனகாவை வீட்டில் வந்து விட்டு விட்டு வந்தேன் என்று அந்த பேட்டியில் குட்டி பத்மினி பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications