விஜய் டிவியில் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஜீ தமிழ் கதாநாயகி.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை கண்மணி மனோகரன் முக்கிய கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இளைஞர்களை கவர்ந்த விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை போலவே பல சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரைக்கும் டிஆர்பியில் சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருக்கும். ஆனால் இப்போது அதை முதல் முறையாக விஜய் டிவி சீரியல் உடைத்து இருக்கிறது.

நேற்று வெளியான டிஆர்பி லிஸ்டில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதுபோல டாப் 10 இடத்தில் பல மாற்றங்களும் இடம் பிடித்திருக்கிறது. ஆரம்பத்தில் சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கும். ஆனால் இப்போது விஜய் டிவியில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து இயக்குனர் பிரவீன் பெண்ணட் விஜய் டிவியில் மகாநதி சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நான்கு அக்கா தங்கைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியலில் திடீர் திடீரென புது முகங்கள் அறிமுகம் ஆகி கொண்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த சீரியலில் கதை ஆரம்பத்தில் ஒருவிதமாக பயணித்து வந்தது. ஆனால் திடீரென்று கதாநாயகனாக காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் சுவாமிநாதன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதுபோல இப்போது புதியதாக இன்னொரு கதாநாயகியும் அறிமுகமாகி இருக்கிறார். அவர் வரப்போகும் ப்ரோமோ வெளியான நேரத்தில் இருந்து அவர் யாராக இருக்கும் என்று இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.
ரசிகர்கள் யூகித்தப்படியே அது நடிகை கண்மணி மனோகரன் தான். இவர் ஏற்கனவே பிரவீன் பென்னட் இயக்கிய பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அந்த சீரியல் முடிவடைந்ததும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் ஜீ தமிழில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அந்த சீரியலும் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இவர் காட்சிகள் மகாநதி சீரியலில் ஒளிபரப்பாகி விட்டது.

இவர் விஜயின் முன்னாள் காதலியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் காவிரி இருவரும் தங்களுடைய காதலை இப்போது உணர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் புதிய டுவிஸ்ட் ஆக இப்போது கண்மணி மனோகரன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இதனால் இனி என்ன மாதிரி கதை போகப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கண்மணி மனோகரனுக்கு சமீபத்தில் தான் எங்கேஜ்மென்ட் நடந்தது. அவருடைய வருங்கால கணவர் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் அஸ்வந்த் தான். அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலிலும் கதாநாயகனின் தம்பியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications