மதுமிதா கை கிழிச்சது யாரால? ‘அது’ மறந்து போச்சா வனிதாவுக்கு எதிராக கஸ்தூரி கேட்ட கேள்வி
சென்னை: நடிகை வனிதா சில தினங்களுக்கு முன்பு தன்னை பிரதீப் ரசிகர்கள் என்று சொல்லி ஒருவர் தாக்கி விட்டதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் அது குறித்து நடிகை கஸ்தூரி வனிதாவிடம் சில கேள்விகளை கேட்டபடி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வனிதா இருக்கும்போது மதுமிதா கையை கிழிச்ச போது உங்களுக்கு இது விளையாட்டு இதை இவ்வளவு வன்மம் ஆக்க கூடாது என்று தெரியாதா? என்று அதில் கஸ்தூரி கேள்வி கேட்டிருக்கிறார்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு வனிதா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் நான் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு போயிட்டு வந்திருந்தேன். அது ஒரு அப்பார்ட்மெண்ட் அது தனியான இருட்டான இடம். அப்போ என்னுடைய காரை நான் பார்க் பண்ண போயிருந்தேன். நான் சிங்கிளாகவும் இருந்தேன். அந்த நேரத்தில் திடீரென்று ஒரு ஆளு வந்து நீ பிரதீப்புக்கு ரெட் கார்ட் காட்டுவியா என்று என்னை அடித்து விட்டார்.

அது பிரதீப்புடைய ரசிகராக தான் இருக்கும் என்கிற மாதிரி ஒரு சர்ச்சையை கிளப்பும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பிரதீப் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்திருந்தார். அந்த வாட்ஸ் அப் சேட்டையும் பிரதீப் வெளியிட்டு இருந்தார்.
அதில் எனக்கு இந்த மாதிரி பண்ணனும்னு அவசியம் கிடையாது. ஆனால் உங்களுக்கு இந்த மாதிரி தாக்குதல் நடந்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். உங்களுடைய ஹெல்ப் உங்க பொண்ணுக்கு தேவை கிடையாது என்று சொல்லி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பலரும் வனிதாவிற்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்தனர்.

அதோடு பலர் வனிதா கண்டிப்பாக நடிக்கிறாங்க, அனுதாப ஓட்டுக்காக இப்படி பண்ணுறாங்க. வேற யாரிடமோ உள்ள பிரச்சனையால் நடந்த தாக்குதலுக்கு பிரதீப் ரசிகர்கள் என்று வனிதா சொல்கிறாரா? என்று பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு வனிதாவும் ரிப்ளை செய்திருந்தார். அதில் என்னுடைய பொண்ணுக்கு நான் இப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்ல.
அவ என் கூட இருந்திருந்தால் நான் உங்களை விட்டுட்டு போயிட்டேன் அம்மா, என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு ரொம்ப பீல் பண்ணுவா என்று கூறியிருந்தார். இந்த விஷயம் ரொம்பவே பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி நடிகை கஸ்தூரி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அடித்தவன் யாரோ அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும்? தன் ரிவ்யூவால் வந்த வினை. இவ்வளவு நடந்த பிறகும் வனிதா போலீசுக்கு போக மாட்டாராம். வனிதாவின் ருசிகரமான பொய்கள் youtube க்கும்,, விஜய் டிவிக்கும் கண்டன்ட்டாக வேண்டுமானால் பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா? என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
I should show sympathy, but சனியன் இந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற பொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் gherao செய்தது நினைவுக்கு வருகிறது... It's only a game அப்போ தெரியலையா? Nobody deserves violence, not just you.
— Kasturi (@KasthuriShankar) November 26, 2023
அதுபோல இன்னொரு பதிவிலும் கஸ்தூரி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் எனக்கு சிம்ப்பதி காட்டனும் என்று தான் தோணுகிறது. ஆனால் சனியன் அந்த நேரம் பார்த்து எனக்கு மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்றபொழுதிலும் நெஞ்சில் ஈரமே இல்லாமல் வனிதா அண்ட் கோ அவரை மேலும் மேலும் டார்ச்சர் செய்தது நினைவுக்கு வருகிறது.
இது ஒன்லி கேம் ஷோ என்று உங்களுக்கு அப்போ தெரியலையா? வைலன்ஸ் என்பது உங்களுக்கு மட்டுமில்லங்க யாருக்குமே வரக்கூடாது என்று உங்களுக்கு மதுமிதாவிற்கு பண்ணும் போது தெரியலையா? என்று கஸ்தூரி கேள்வி கேட்டிருக்கும் நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வனிதாவோடு சேர்ந்து ஒரு சிலர் செய்த செயலால்தான் மதுமிதா கையை வெட்டிக்கொண்டு இருந்தார். அதனால் அதற்கு கமல் கூட மதுமிதாவிற்கு அட்வைஸ் செய்திருப்பார். அதை இப்போது கஸ்தூரி நினைவுப்படுத்தி இருக்கும் நிலையில் ஒரு சில ரசிகர்கள் அக்கா நீயும் ரொம்ப பேசியிருக்க நீயும் வாயில வாங்கி கட்டிக்காத என்று நடிகை கஸ்தூரியை அலர்ட் செய்து வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications