என் பொண்ணுக்கு நடந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது! ஏழு வருஷமாக பட்ட கஷ்டம்.. கதறி அழுத நடிகை கஸ்தூரி
சென்னை: நடிகை கஸ்தூரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய மகள் புற்றுநோய் பாதிக்கப்பட்டு பட்ட கஷ்டம் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார். 7 வருடமாக மகள் மருத்துவமனையில் இருக்கும் போது பட்ட வலி வேதனை குறித்தும் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
நடிகை கஸ்தூரி 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தாலும் 90ஸ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல அரசியல் பிரமுகராகவும் வலம் வருகிற சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். கதாநாயகியாக ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய கஸ்தூரி இப்போது குணச்சித்திர வேடங்களிலும், குத்து பாடலுக்கும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார்.

கஸ்தூரி நடிக்கும் சீரியல்
அதேபோல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தன்னுடைய மகள் குறித்து பேசி இருக்கிறார். கஸ்தூரி அதிகமாக தன்னுடைய குடும்பத்தை சோசியல் மீடியா பக்கங்களில் காட்டியது கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகளுடன் அவர் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தார். அது சோசியல் மீடியா பக்கத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது.
கஸ்தூரி நடிக்கும் திரைப்படம்
அதுபோல இப்போது நடிகை கஸ்தூரி சந்தானம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது தன்னுடைய குடும்பத்தை பற்றி பேசி இருந்தார். அதில் தன் மகளுக்கு ஏழு வருடங்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறியிருந்தார்.
மகள் பற்றி கஸ்தூரி
ஒவ்வொரு நாளும் தன்னுடைய மகள் உயிர் பிழைப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளோடு தான் மருத்துவமனையில் காத்திருந்தேன். புற்றுநோய் மருத்துவமனையில் எங்களுக்கு என்று தனி அறை இருந்தது, அந்த அறையில் இரண்டரை வருடம் ஆக நான் ஒரே சோபாவில் அமர்ந்து இருந்தேன். என் மகளைப் போல அந்த ஹாஸ்பிடலில் பல குழந்தைகள் இருந்தார்கள். எல்லா பெற்றோர்களும் நம்முடைய பிள்ளை வந்து விடும் என்ற ஒரே நம்பிக்கையில் தான் அங்கு காத்திருந்தார்கள். அதையெல்லாம் மறக்கவே முடியாது.

கஸ்தூரி எமோஷனல்
நான் ஓரளவுக்கு செட்டில் ஆகி இருந்த நிலையில் தான் என்னுடைய குழந்தைக்கு இந்த நிலைமை வந்தது. ஆனால் கஷ்டப்படுகிறவர்களுடைய குழந்தைகளுக்கு இதுபோன்று நடந்தால் அந்த குழந்தைகளுக்கு செலவழிக்க முடியாமல் அவர்கள் படும் கஷ்டத்தையும் பார்த்து
இருக்கிறேன். என் மகள் இரண்டு முறை இறந்து விடுவாள் என்று நினைத்தேன் மூன்றாவது முறை அவளை மீட்டுக் கொண்டு வந்து விட்டேன். எங்களைப் போல அந்த ஹாஸ்பிடலில் பலர் காத்திருந்தார்கள். அந்தக் கொடுமையான வலி வேறு யாருக்கும் வரக்கூடாது, பிள்ளைகள் நம் கண் முன்பு துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
கதறி அழுத கஸ்தூரி
அதனால் தான் நான் மனு மிஷன் என்று தொடங்கி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். இதனால் பல குழந்தைகளுக்கு உதவ முடிகிறது. என் மகள் ரத்த புற்று நோயால் ஏழு வருடங்கள் கஷ்டப்பட்டால் இப்போது அவள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டால், அதேபோல இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை கனவு என்று பேசிக்கொண்டு இருக்கும் போது நடிகை கஸ்தூரி கண் கலங்கி அழுதிருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications