ஆண்களை நம்பி பயன் இல்ல.. அவர்களால் முடியாததை என்னால் செய்ய முடியும்! நடிகை கஸ்தூரியின் விளக்கம்
சென்னை: நடிகை கஸ்தூரி சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல் என்று பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து அவர் பேசிய விளக்கம் இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் நபர்களின் ஒருவராக நடிகை கஸ்தூரியும் இருந்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் 80ஸ் இறுதி காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்திருந்தாலும் 90ஸ் காலகட்டத்திலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதே போல இந்தியன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் டான்ஸ் பலருடைய ஃபேவரைட்.

தெலுங்கு பாக்கியலட்சுமி
சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலின் தெலுங்கு வர்ஷனில் கஸ்தூரி தான் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலில் தெலுங்கு வர்ஷன் கடந்த ஆண்டிலிருந்து ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் பிரபலம் கஸ்தூரி
அதுபோல கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிகமாக பரீட்சையமாகி இருந்தார். இப்போதும் திரைப்படங்கள் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள், அரசியல் பிரச்சனைகளுக்கு அடிக்கடி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆண்கள் பற்றி கஸ்தூரி
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஆண்கள் குறித்து அவர் பேசிய விளக்கம் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதில் அவர் பேசுகையில், பொதுவாக ஆண்களை நம்பி எந்த பயனும் இல்லை என்று தான் நான் சொல்வேன். அவங்களுக்கு பொறுப்பு இருக்கணும் என்று நாம நினைக்கவே கூடாது.
100 ரூபாய் கணக்கு
ஒரு பெண்குடிச்சுட்டு பிள்ளைகளை கவனிக்காம குடும்பத்தை அழிச்சிட்டான்னு நீங்க கேள்வியே பட முடியாது. எங்கேயாவது கோடியில் ஒரு குடும்பம் வேணா அப்படி இருக்கும். ஆனால் ஒரு ஆணால் அழிந்த குடும்பம் அதிகமாக இருக்கு. வீட்டோட சாவிக்கொத்து ஒரு பெண் கிட்ட இருந்தா அந்த பெண் அந்த குடும்பத்தை உயர்த்த தான் பார்ப்பாங்க. ஒரு நூறு ரூபாய் இருந்தால் அதை எப்படி செலவு செய்யலாம் என்று ஒரு ஆண் நிமிடத்திற்குள் செலவழித்து முடித்து விடுவார்கள்.
தாயால் எல்லாம் முடியும்
ஆனால் ஒரு பெண் கிட்ட அதே 100 ரூபாய் இருந்தா குடும்பத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்று கணக்கு போடுவாங்க, செலவழிப்பாங்க. கடைசியில் அந்தத் தாய்க்கு எதுவுமே இருக்காது. நான் ஒரு பெண்ணாக பிறந்ததால் பெருமையாக தான் நினைக்கிறேன். நான் பல பெண்களுக்கு ஆண்கள் செய்ய முடியாத உதவிகளை செய்து இருக்கிறேன்.

கஸ்தூரி பெருமிதம்
என்கூட பிறந்த சகோதரிகள், என்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் என்னுடைய உடன்பிறவா பல சகோதரிகளுக்கு என்னால் முடிந்த அளவிற்கு நான் உதவிகள் செய்து இருக்கிறேன். பெண்ணாக இருப்பதால் அவர்களுக்கு என்னால் அந்த உதவிகளை எல்லாம் செய்ய முடிந்தது என்று நான் நினைக்கிறேன் என அந்த பேட்டியில் கஸ்தூரி பேசியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications