திருமணமான ஒரே மாதத்தில் வீட்டில் பங்க்ஷன்.. மகிழ்ச்சியை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து இருந்த நிலையில் திருமணம் ஆன ஒரு மாதத்தில் அவருக்கு மருதாணி நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
திருமணத்தைப் போலவே மருதாணி பங்க்ஷனையும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவரோடு கோவாவில் தான் கொண்டாடி இருக்கிறார். அப்போது வித்தியாசமான பல போட்டோக்களை எடுத்து குவித்து இருக்கிறார்.

அதில் ஒரு புகைப்படத்தில் கைகளில் வைக்கப்பட்ட மருதாணி மட்டும் போக்கஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதுபோல இன்னொரு போட்டோவில் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டு சங்கீத் நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி இருக்கிறார். அவரோடு அவருடைய கணவர் ஆண்டனி தட்டிலும் செம டான்ஸ் போட்டு இருக்கிறார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் பாலிவுட்டுக்கு சென்ற கீர்த்தி சுரேஷுக்கு அங்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் மீண்டும் தமிழ் பொண்ணாக மாறிவிட்டாரா? என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தட்டில் ஹீரோ போல இருக்கிறார் என்றும் அவரோடு சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதுபோல ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருந்தார். சினிமாவில் அறிமுகம் ஆகி பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததை சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் கொண்டாடி இருந்தார். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் 2013 ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்த மலையாள படமான கீதாஞ்சலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுதான் கீர்த்தி சுரேஷின் முதல் படம். முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷ் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் பலருக்கும் இவரை பிரபலப்படுத்தியது. ஆனால் அதற்கு முன்பு 2015ல் இது என்ன மாயம் என்ற படத்தில் மூலமாகத்தான் தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.

ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் 2016 ஆம் ஆண்டு " நேனு சைலஜா" படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். நடிகை சாவித்திரியின் பயோபிக் படமான மகா நடிகை படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது சுரேஷுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரோடு எடுக்கும் அதிகமான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications