என் கல்யாணத்துக்கு வந்த கார்த்திக் கதறி அழுதாரு.. கணவரோடு நான் காலில் விழுந்தேன்.. நடிகை குஷ்பூ ஓபன்
சென்னை: நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்திக் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதிலும் தன்னுடைய திருமணத்தில் கார்த்திக் காலில் விழுந்ததும் அவர் அழுதது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகை குஷ்பூ தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் வருஷம் 16 திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவருடைய முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது நடிகர் கார்த்திக் தான். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது.

அதிலும் "பூ பூக்கும் மாசம்" என்ற பாடல் சுசிலாவின் குரலில் கேட்கும் ரசிகர்களை கிறங்க வைக்கும்.. அதுபோல அந்த பாடலை பார்க்கும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வகையில் குஷ்புவின் பெர்ஃபார்மன்ஸ் அசத்தலாக இருக்கும். அந்த பாடலில் குஷ்பூ மற்றும் கார்த்திக் காதல் கன்னாபின்னாவென வழிந்தோடும். இந்த திரைப்படத்திற்கு பிறகு குஷ்பூ கார்த்திக்கோடு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதேபோல நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் சுந்தர் சி யை 2000 வருஷத்தில் குஷ்பூ திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் குஷ்பூ தன்னுடைய சினிமா அனுபவங்கள் திருமண வாழ்க்கை குறித்து பல விஷயங்களை குஷ்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் என்னுடைய சினிமா வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் கார்த்திக் ஒருவர். அவரோடு நான் முதல் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதற்கு பிறகு என்னை எப்போதும் அவர் டார்லிங் என்றுதான் கூப்பிடுவார். நாங்க காதலிக்கிற விஷயத்தை முதல் முறையாக என்னுடைய கணவர் கார்த்திக்கிடம் தான் சொல்லி இருந்தார். கார்த்திக்கிடம் எங்களுடைய திருமண விஷயத்தை சொன்னதுமே அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு எனக்கு போன் பண்ணி ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தியிருந்தார்.
அதுபோல எங்களுடைய திருமணத்திலும் அவர் கலந்து கொண்டார். அவருடைய காலில் நானும் என்னுடைய கணவரும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அப்போது அவர் என்னுடைய தம்பியும் தம்பி மனைவியும் என்று சொல்லி எங்களை ஆசீர்வாதம் செய்து இருந்தார். பிறகு வீட்டிற்கு சென்று போன் பண்ணி கதறி அழுதார். அவருக்கு எங்களுடைய திருமணம் ரொம்பவும் சந்தோஷத்தை கொடுத்து இருந்தது.
நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் இனி வாழ்க்கையில் நன்றாக இருப்பேன் என்று அவர் அந்த நேரத்தில் சொல்லியிருந்தார் என்று கார்த்திக் குறித்து அந்த பேட்டியில் குஷ்பூ பேசி இருக்கிறார். அதுபோல தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி பேசுகையில் நாங்கள் எங்களுடைய திருமணத்திற்கு பிறகு அதிகமாக சண்டை போட்டோம். காதலித்து கொண்டிருக்கும் போது கூட அவ்வளவு சண்டை போட்டது கிடையாது.
ஆனால் கல்யாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே எங்களுக்குள் அதிகமான சண்டை வந்தது. எப்போதும் சண்டை வரும் போதெல்லாம் அவர் உன்னை நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா சந்தோசமா இருந்திருக்கலாம் என்று சொல்லுவார். நானும் உங்களை கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம் என்று சொல்லுவேன்.
எவ்வளவு சண்டை போட்டாலும் நான் ஒரு நாள் கூட இவரிடம் கோபித்துக் கொண்டு என்னுடைய அம்மா வீட்டுக்கு போனது கிடையாது. எங்களுடைய சண்டை எல்லாம் கொஞ்ச நேரம் தான். பிறகு சமாதானம் ஆகி விடுவோம் என்று அந்த பேட்டியில் சுந்தர். சி பற்றி குஷ்பூ பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications