காதலனால் சித்திரவதை! இரவில் போன் செய்த பிரபலம்.. சினிமாவை விட்டு விலக காரணம்? நடிகை கிரண் எமோஷனல்
சென்னை: நடிகை கிரண் பேட்டி ஒன்றில் தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றியது குறித்தும் தனக்கு சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் சிலர் கொடுத்த தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதோடு தான் எதனால் சினிமாவில் இருந்து விலகினேன் என்று கிரண் பேட்டி கொடுத்திருக்கிறார். பிறர் ஜெமினி திரைப்படத்தில் அறிமுகமாகி முதல் திரை படத்திலேயே பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தார். ஆனால் தொடர்ச்சியாக பெரிய அளவில் ஜொலிக்காமல் அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கி விட்டார்.

ஒரு சில நடிகைகள், நடிகர்கள் முதல் திரைப்படத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று விடுகிறார்கள். ஆனால் அடுத்தடுத்து அவர்களால் தாங்கள் பெற்ற வெற்றியை நிலை நிறுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு சிலர் சினிமாவை விட்டு விலகிப் போய் விடுகிறார்கள். இந்த நிலையில் நடிகை கிரணுக்கு முதல் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து அஜித், பிரசாந்த், கமல், விஜயகாந்த், விக்ரம்க்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் 'திருமலை' திரைப்படத்தில் "மலையாள பகவதி" என்ற ஒரு பாடலுக்கு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதற்குப் பிறகு பெரிய அளவில் கிரணை திரையில் காண முடியவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு மாமியாராகவும் கிரண் நடித்து விட்டார்.
இவர் ஆம்பள திரைப்படத்தில் விஷாலுக்கே மாமியாராக மாறிவிட்டாரே என்று பலரும் கலாய்த்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கிரண் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அப்லோடு செய்து கொண்டிருந்தார். அது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவோடு தனியார் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அப்போது தான் எதனால் சினிமாவில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். அதில் கிரண் பேசுகையில் எனக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது அந்த நேரத்தில் என்னுடைய காதலன் சொன்ன வார்த்தைக்காக தான் நான் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருந்தேன். ஆனால் நான் எடுத்த முடிவு தவறு என்பது பிறகு எனக்கு தெரிய வந்தது. அதனால் மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று சினிமாவிற்கு திரும்பி வந்தேன்.
ஆனால் அந்த நேரத்தில் என்னுடைய சந்தர்ப்பத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டு அட்ஜஸ்ட் செய்யுமாறு என்னிடம் கேட்டார்கள் என்று வெளிப்படையாக கிரண் கூறி இருக்கிறார். அதற்குப் பிறகு என்னுடைய காதலனும் என்னை பிரிந்து விட்டான். என்னுடைய காதலன் என்னை பிரிவதற்கு காரணம் எங்கள் இருவருக்கும் சில பிரச்சனைகள் வந்தது. ஒரு முறை என்னை காதலன் அடித்து விட்டான். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் நான் அவனை போன் போட்டு பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டேன். அவனும் வந்தான் அப்போது அவன் மீது இருந்த கோபத்தால் அவனை அடித்து அவனுடைய ஆடைகளை கிழித்து விட்டேன். அவன் தெருவில் ஆடைகள் இன்றி சென்றான். அப்போது கூட என்னுடைய முகத்தை தொடுவதற்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கு என்று நான் கேட்டேன். அதுபோல சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் இல்லை என்பதை நான் சில வருடங்கள் கழித்து தான் உணர்ந்தேன்.
அதனாலையே சிலர் என்னை தவறாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்கள். ஒரு சில பிரபலங்கள் எனக்கு இரவு நேரத்தில் போன் பண்ணி இருக்கிறார்கள். அவர்களுடைய தப்பான எண்ணத்தை நான் புரிந்து கொண்டேன். அதற்கு பிறகு தான் நான் அவர்களைப் பற்றி புரிந்து இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கிரண் பேசியிருக்கிறார்.
அதோடு என்னைப்பற்றி சில பொய்யான வதந்திகள் பரவப்பட்டு வருகிறது. எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. நான் அம்மாவாக ஆகிவிட்டேன் என்றும் கிசுகிசுப்பு பரவி வருகிறது. ஆனால் உண்மையில் நான் திருமணம் செய்து கொண்டு வாழ விரும்பினேன். ஆனால் என்னுடைய காதல் முறிவு என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான நிகழ்வு என்று எமோஷனலாக அந்த பேட்டியில் கிரண் பேசியிருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications