கல்யாணம் பண்ணாத காரணம் இதுதான்! திடீர் குண்டை தூக்கி போட்ட கிரண்.. அதுக்குன்னு இப்படி ஒரு முடிவா?
சென்னை: ஜெய்பூரை சார்ந்த கிரண் சமீபத்தில் கோவாவில் தன்னுடைய சகோதரனோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கிரணை சமீபத்தில் பல சேனல்களில் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஷகிலாவும் கிரனை பேட்டி எடுப்பதற்காக கோவாவுக்கே சென்று இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் அறிமுகமான கிரண் முதல் திரைப்படத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். அந்த திரைப்படம் வெளியான நேரத்தில் அடிக்கடி சன் டிவியில் ட்ரெய்லர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்க, இவரும் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார். முதல் திரைப்படத்தில் பப்ளியாக புசுபுசுவென்று இருந்த இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

அதிலும் இவர் ஜெமினி ஜெமினி என்ற பாட்டுக்கு போட்ட ஆட்டம் பலருடைய மனதை கொள்ளை கொண்டு இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பெரிய நடிகர்களோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரசாந்த், அஜித், விஜயகாந்த், கமல் என்று பல நடிகர்களோடு ஜோடியாக கிரண் நடித்துக் கொண்டிருந்தார். எல்லாமே சூப்பர் டூப்பராக வெற்றி பெற்றது. ஆனாலும் திடீரென்று சினிமாவில் இருந்து விலகி இருந்த கிரண் சில காலம் காணாமல் போய்விட்டார்.
அதற்குப் பிறகு தான் திடீரென்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கலங்கடிக்க தொடங்கி விட்டார். இளைஞர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபயர் விட்டு பாலோவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு இவருக்கு திரைப்படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் ஆம்பள திரைப்படத்தில் இவர் விஷாலுக்கு மாமியாராக நடித்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் சில வாரங்களாகவே கிரண் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக வந்த வண்ணமாக இருக்கிறது. தொடர்ச்சியாக போட்டி போட்டு பல சேனல்களும் கிரணை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஷகிலாவோடு கிரண் பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். அப்போது கிரண் பேசுகையில் எனக்கு பீச்சில் இருப்பதுதான் ரொம்ப பிடிக்கும் அதனாலேயே கோவாவில் செட்டில் ஆகிவிட்டேன் என்று பேசி இருக்கிறார்.
அதோடு திருமணம் பற்றி பேசிய கிரண் எனக்கு என்னுடைய வேலை, கேரியர் எல்லாம் முடிந்த பிறகு இந்த வருடம் எப்படியாவது திருமணம் செய்து கொள்வேன். அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளை தான் என்று சொல்லி தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதோடு வெளிநாட்டு மாப்பிள்ளை திருமணம் செய்து தான் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைத்திருப்பதாகவும் கூறி இரக்கிறார்.
இவர் இப்படி சொல்லி இருப்பதை பார்க்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு மாப்பிள்ளை ரெடியாக இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சமீபத்தில் ஷகிலாவோடு பேசிய இன்னொரு வீடியோவில் தான் ஒரு நபரை காதலித்ததாகவும் அந்த நபருக்காக தான் சினிமாவை விட்டு வந்தேன் என்றும் கிரண் கூறி இருந்தார்.
ஆனால் அந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டார் அதோடு தனக்கும் அந்த நபருக்கும் ஒரு நாள் வாக்குவாதம் வரும்போது தன்னை அடித்து விட்டார் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவரை ஒரு முறை வீட்டிற்கு வரவைத்து நானும் அடித்து ஆடைகளை அவிழ்த்து ரோட்டில் ஓட விட்டேன் என்று கிரண் பேசி இருந்தார். அதுபோல பேட்டிகளில் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசும் கிரணுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications