நிர்வாண போட்டோவை போஸ்ட் போட காரணமே இதுதான்! வெளிப்படையாக பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகையும் எழுத்தாளருமான கொற்றவை சமீபத்தில் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஆடையின்றி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த புகைப்படங்களை எதற்காக தான் பகிர்ந்தேன் என்பது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் முதல் பாகம் வெளியான சமயத்தில் பட்டிதொட்டி எல்லாம் இந்த சீரியல் பற்றிய பேச்சுதான் இருந்தது. பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து எப்படி போராடி முன்னேறுகிறார்கள் என்பதை மையப்படுத்திய இந்த சீரியலின் எதார்த்தமான கதை பலருக்கும் பிடித்திருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த சீரியலில் கதை பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பதிவு
காரணம் பெண்கள் முன்னேற்றம் அடைவதை முக்கியப்படுத்தாமல் வீட்டிற்குள் ஆண்களிடம் மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருப்பது போன்றே கதை காட்டப்படுவது அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்திருந்தனர். அதில் நடிகை கொற்றவையும் ஒருவர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இருக்கிறார்.
நடிகையின் சர்ச்சை போட்டோ
கொற்றவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இரண்டு புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் ஒன்று கொற்றவை நிர்வாணமாக அமர்ந்து கொண்டு மேலே பார்க்கும் புகைப்படம் ஒன்றும், மற்றொன்றில் நிர்வாணமாக பின்பக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படமும் இருந்தது. இதுகுறித்து கொற்றவை கொடுத்த விளக்கத்தில் நான் பதிவிட்ட முதல் இரண்டு புகைப்படமே அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது எடுத்தேன். நான் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் பரிதவிப்பும், இயலாமையுடன் பெண்களின் உடலை எப்போதுடா விடிவிப்பீர்கள்? என்பதை தான் நான் சொல்ல முயற்சி செய்தேன்".
நிர்வாண புகைப்படம்
"மற்றொரு புகைப்படத்தில் மேலே இருந்து கடவுள் வருவார்?" என்று பார்த்துக் கொண்டிருப்பது போல் இருக்கும். இவை இரண்டும் குறியீடுகள் தான். நான் அந்த புகைப்படங்கள் மூலம் சொல்லி இருக்கிறது. இந்த குறியீடு புரிய வேண்டும் என்றால் கொஞ்சம் அறிவு வேண்டும். அந்த அறிவு இந்த சமூகத்தில் குறைவாகத்தான் இருக்கிறது. என் உடலை நான் ஆயுதமாக வைக்கிறேன். இதைத்தான் நான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருந்தும் சொல்கிறேன்.
கொற்றவை விளக்கம்
என் புகைப்படத்தை நான் பகிர காரணமே சமீபத்தில் நடந்த விவாதத்தில் பெண்கள் உடை சார்ந்தும், உடல் சார்ந்தும் இருந்தது. நான் பெண்களை நோக்கி கேட்கிறேன், "உங்கள் நிர்வாணம் உங்களுக்கு ஆபாசமாக நினைக்காதீங்க", யாராவது உங்களை புகைப்படம் எடுத்து மிரட்டினால் அதை கடந்து விடுங்கள். அதேபோல் ஆண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், "நீங்கள் பெண் உடலை பார்ப்பதிலிருந்து கடந்து விடுங்கள். பெண்களை பாருங்கள், ரசியுங்கள், உங்கள் விருப்பத்தை அவர்களிடம் தெரிவியுங்கள். அவங்களுக்கு விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஆனால் இப்படி உடை அணிந்தால் இப்படி செய்தேன் என்று கூறும் உரிமை உங்களுக்கு கிடையாது" என்று கூறியிருக்கிறார்.
கொற்றவையின் மற்றொரு பதிவு
அதோடு இன்னொரு பதிவில் ஆன்மீகத்தில் அம்மணம் அருவருப்பு அல்ல அது துறவு, பற்றற்ற நிலை ,சரி அது ஏன் அருவருப்பாக இல்லை எனில் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம் "துறவு" என்னும் கருத்தியல் மூலம்! அது போலவே அவுத்து போட்டாலும் பெண் உடலை பண்புடன் காண ஆண்களை பழக்கப்படுத்தி சொல்கிறேன். 'இதுதான் எனது அரசியல் போராட்டம்'. சீரியல் நடிகையாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியா இருந்தாலும் இதை செய்யலாம்! செய்வேன்!

போராட்டம்
ஆண்கள் எப்படி முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து கொண்டு அவர்கள் உழைப்பு சக்தியை விற்றுக் கொண்டே அந்த அமைப்புக்கும் சுரண்டலுக்கும் எதிராக இயங்குகிறார்களோ ,அதே போல் 'பிழைப்புக்காக' என் உடலை விற்றுக் கொண்டு என் உடலை விடுவிக்க நான் போராட எனக்கு உரிமை உண்டு. பெண் உடல் மீதான பாரபட்சத்தை கேள்வி கேட்க நிர்வாணத்தை இயல்பாக்கினால் பெண்கள் மீதான பாலியல் நாட்டம் பண்படும் என்று உணர்ந்த, போராட எனக்கு உரிமை உண்டு!
கொற்றவையின் கேள்வி
என் பேனா உழைப்பு சுரண்டலை, சாதி ஆதிக்கத்தை பேசும் ஆயுதம். என் உடல் பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிரான ஆயுதம். ஓர் ஐயம் நிர்வாண சாமியார்/ துறவில் பெண்கள் அம்மணமாக திரிகிறார்களா? "ஆன்மீகம்/ சட்டம்" எதை அனுமதிக்கிறதா?. நான் பார்த்தவரை குறிப்பிட்ட மதத்தில் தலை தொடங்கி முழுவதும் போர்த்திக் கொண்டுதான் உள்ளார்கள். என் அவதானிப்பு தவறென்றால் ஆதாரங்களோடு எடுத்துரைக்கவும் அதாவது நிகழ்காலத்தில் பெண் துறவிகள் நிர்வாணமாக இருக்கிறார்களா? துறவு அம்மணம் பேசும் மதங்களில்! என்று அந்த பதிவில் கொற்றவை கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications